தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் முஸ்லிம்களின் குடியிருப்புகளை அகற்ற சதி – அசாத் சாலி

தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் கேகாலை தெவனகலைப் பகுதியிலுள்ள முஸ்லிம்களின் விடுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி குற்றம் சாட்டியுள்ளர். அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் அமைப்பு நேற்று (04) புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மகா நாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது கேகாலை மாவட்டத்தில் தெவனகல பிரதேசத்தில் ஒரு புதிய பிரச்சினை எழுந்துள்ளது. அங்குள்ள ஒரு இடத்தில் தொல்பொருள்கள் கண்டு எடுக்கப்பட்டதாக கூறி மேலதிக அகழ்வு ஆராய்ச்சிக்காக நில ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சிகள் மேட்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த உத்தேச ஆக்கிரமிப்பு பிரதேசத்தில் முஸ்லிம் குடியிருப்புகளும் பள்ளிவாசல்களும் அமைந்துள்ளன. நேற்று முன்தினம் இங்கு சென்ற அநுராதாபுரத்தைச் சேர்ந்த பெளத்த தேரர் ஒருவர் இந்த அகழ்வு ஆராய்ச்சி பிரதேசம் விஸ்தரிக்கப்பட்டு அங்குள்ள முஸ்லிம் விடுகள், பள்ளிவாசல்கள் எல்லாமே தரைமட்டமாக்கப்பட வேண்டு என பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளார்.

அநுராதாபுரத்தில் முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களை அழித்தவன் நானே. கேகாலையிலும் அதை செய்தே தீருவேன் என்று அவர் சபதம் இட்டுள்ளார். இந்தப் பகுதி மக்கள் தற்போது பெரும் அச்சத்துக்கும் நிம்மதியற்ற நிலைக்கும் ஆளாகியுள்ளனர். அரசாங்கம் இந்த விடயத்தில் உடனடியாக தலையிட்டு விளைவுகள் மோசமடைவதத்கு முன் உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள ஒருவகை புதிய நோயாக தான் இதை பார்க்கவேண்டியுள்ளது. நாடு முழுவதும் சிறுபான்மையினர் செறிந்து வாழும் இடங்கள் குறி வைக்கப்பட்டு புதிய பிரச்சினைகள் அன்றாடம் தோற்றுவிக்கப்படுகின்றன. இந்த நோய்ற்கு காரணம் என்ன? மக்கள் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர். அரசாங்கம் ஏற்கனவே சர்வதேச மட்டத்தில் பல பிரச்சினைகளை விலை கொடுத்து வாங்கி கொண்டு அதில் இருந்து மீள முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறது. இந் நிலையில் உள்ளுரிலும் மேலும் பிரச்சினைகளை தான் அது உருவாகிக்கொண்டு இருக்கின்றதே தவிர இதுவரை எந்தப் பிரச்சினைகும் உருப்படியான முடிவினைக் கண்டதாகத் தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

1473033_729227343771700_976647964_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares