நிதி அமைச்சராக கபீர் ஹாசிம் !

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் எதிர்வரும் ஜனவரி மாதம் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

இதன்போது, ரவி கருணாநாயக்கவின் நிதி அமைச்சர் பதவி மீளப்பெறப்பட்டு, அவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள பிறிதோர் அமைச்சு வழங்கப்படும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.550187598kabir3

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்படும் வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவும் இது தொடர்பில் அரசின் உயர் மட்டத்தினரை வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சர்ச்சைக்குரிய 2016 வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த கணம் முதலே நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கா மீதான எதிர்ப்புக்கள் வலுப்பெற்றுள்ளன.

 

You may also like...

1 Response

  1. Garu kabir Hasem mathithumadda jayawewa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *