நீண்ட காலம் புனரமைக்கப்படாத மாவனல்லை- ரம்புக்கனை வீதி

மாவனல்லை பிரதேச சபைக்கும் ரம்புக்கனை பிரதேச சபைக்கும் உட்டபட மாவனல்லை ரம்புக்கனை பிரதான வீதி கடந்த பல வருடங்களுக்கு மேலாகப் புனரமைப்பின்றிக் காணப்படுவதால் வீதியால் போக்குவரத்துச் செய்வோரும், அந்த வீதி அருகே உள்ள பிரதேச மக்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

மாவனல்லை, மஹவத்த, பூட்டாவா, ரன்டிவல, மகேஹல்வேல, தலகொல்ல, பெத்தவல, பத்தாம்பிடிய, கடிகமுவ, பூருவங்கமுவ, கிரிவேலபிடிய, ரம்புக்கன ஆகிய பிரதேசங்களை உள்ளடிக்கிய இந்த வீதி ரம்புக்கனை தொடக்கம் பெத்தவல வரையான பகுதி காப்பாட் இடப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ள போதிலும் பெத்தவல தொடக்கம் மாவனல்லை வரையான பகுதி சில சில்லறை அரசியல் காரணங்களுக்காக புனரமைக்கப்படாது காணப்படுகின்றது.

சுமார் 19 KM நீளமான குறித்த வீதியில் மாவனல்லை தொடக்கம் பெத்தவல வரையான சுமார் 9 KM பகுதி நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாத காரணத்தால் போக்குவரத்துச் செய்ய முடியாதவாறு மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்து காணப்படுகின்றது. அதுவும் தற்போது பொழிகின்ற மழை காரணமாக இந்த வீதி அறவே பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது.

இந்த பாதையை பயன்படுத்தும் அதிகமான குடும்பங்கள், பாடசாலை செல்லும் பிள்ளைகள் என பலர்
பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

பிரதேசப் பொதுமக்கள் சார்பாக வீதியின் மோசமான நிலை குறித்துப் பிரதேச சபையின் கவனத்திற்கும் கேகாலை மாவட்டத்தில் உள்ள முன்னைய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கும் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கும் பலதடவைகள் கொண்டு வரப்பட்ட போதும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாதது குறித்து விசனம் தெரிவிக்கும் பொதுமக்கள் வீதியைப் புனரமைத்துப் போக்குவரத்தினைச் சீராக மேற்கொள்ள உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர் .

1g

2g

3g

4g

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *