நீதி அமைச்சர் றவூப் ஹக்கீம் ஹெலியில் பதுளை நோக்கி பயணம்

முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியை அவசரமாக சந்திக்கவேண்டும் என்று நீதி அமைச்சர் றவூப் ஹக்கீமின் வேண்டுகோளை தொடர்ந்து உடனடியாக பதுலளை வருமாறும், அதற்காக ஹெலி ஒன்றை ஏற்பாடு செய்து தருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இன்று அதிகாலை பாணந்துறை நோலிமிட் தீக்கிரையாக்கப்பட்டத்தை தொடர்ந்து ஸ்தலத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் ஹக்கீம், உடனடியாக குறித்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவத்தார்.

இதன்போது முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கோள்ளப்படும் தாக்குதல்கள் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் பரவாமல் இருப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் இச்சம்பவங்கள் தொடர்பில் உங்களுடன் உடனடியாக எமது முஸ்லிம் அமைச்சர்கள் கலந்துரையாட வேண்டும் என தெரவித்த போது, தான் பதுலளையில் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நீங்கள் எங்கிருந்தாலும் நாம் அங்கு வந்து உங்களை சிந்திப்போம் என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தபோது, ‘அப்படி என்றால் நான் உங்களுக்கு உலங்கு வானூர்தி ஒன்றை ஏற்பாடு செய்து தருகிறேன், முஸ்லிம் அமைச்சர்களை அழைத்துக்கொண்டு வாருங்கள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது அமைச்சர் ஹக்கீம் பதுலளை நோக்கி உலங்கு வானூர்தியில் பயணத்தை மேட்கொண்டர்.

10456275_876140159080734_1426986099931478630_n-2

You may also like...

1 Response

  1. YL.Mansoor says:

    INTHA NAADDIL YETHU SAATHTHIYAMO ATHAicH SEIKINRAAR SLMC LEADER NEETHI AMAICHCHAR…>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares