நுவரெலியாவில் நடந்தது என்ன? சில கசப்பான உண்மைகள்

nuwareliya1
அண்மையில் எமது சொந்த ஊருக்கு சென்றிருந்த வேளை ஏற்பட்ட எமது சமூகத்தினரால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

ஏப்ரல் மாதம் வந்தாலே எல்லோர் நாவுகளும் உச்சரிக்கும் நகரம் தான் சுந்தர நுவரெலியா. அதற்கு இன்னொரு பெயரும் உண்டு (Little England) சிறிய இங்கிலாந்து.ஆனால் வராலாறு காணாத வகையில் வாகன நெரிசலும் எம்மவரின் பிரசன்னமும் *තමිබිලාට තමයි අවුරැදු අපිට නෙවෙයි* தம்பிலாட தமய் அவ்ருது அபிட நெவைய் என்ற வார்த்தைப் பிரயோகங்கள் ஒரு புறம்,welcome to Nuwaraeliya என்ற எல்லைய அடைகின்ற போதே நெரிசல் இன்னொருபுறம்.15 நிமிடங்களில் கடக்க வேண்டிய தூரங்கள் பல மணி நேரமாகியும் கடக்க முடியாத நிலை.

அதுபோக கொழும்பு மாவட்டத்துக்குச் சொந்தமான (wp) எம்மவரின் சொகுசு வாகனங்கள் அடுத்த பக்கமாக வாகனங்கள் வருவதற்கு விட்டிருந்த வழியில் தமது வாகனங்களைச் செலுத்தி சிலர் மாட்டியும்,சிலர் வாயடித்து தப்பித்தும்…..போயினர். இந்நிலை பல மணிநேரம் நெரிசலில் காத்திருந்த மாற்று மதத்தவரின் முகம் மாறிய நிலையிலிருந்து தெரிந்து கொண்டேன்,★தம்பிலாட மெச்சர மொன ஹதீசித தன்னே அப்பா,மே பலன்டகோ யன விதிஹ*.எம்மவரின் பண்பாடு இது தான் என்பதைக் காட்டி விட்டனர்.

அத்தோடு (15/04/2016) வெள்ளிக்கிழமை பாதையை மரித்து இடம்பெற்ற ஜும்ஆத்தொழுகை.தொழுதால் சும்மா இருக்க வேண்டியது தானே! அதைவிடுத்து அதன் புகைப்படங்களை சமூகத்தளங்களில் பகிர்ந்து எம்மவர் ஜும்ஆவை பாதையில் நிறைவேற்றியிருக்கிறார்கள் என்ற நெஞ்சுரம் வேறு. இதன் விளைவு” நாங்கள் பாதையை மரித்து பிரித் ஓதுகிறோமா??? முஸ்லிம்கள் ஏன் பாதையை மரித்துத் தொழ வேண்டும்?? அவர்களுடைய அனுஷ்டானங்களை பள்ளிவாயலுக்கு உள்ளே அமைத்துக் கொள்ள வேண்டும்”.என்ற பெரும்பான்மையினரின் விமர்சனத்துடன்.

கவலைதரும் விடயம் என்னவெனில் அவ்வழியால் தங்கள் இருப்பிடங்களுக்குச் செல்லும் மாற்றுமத சகோதரர்கள் பொறுமையுடன் தொழுகை முடியும் வரை காத்திருந்தனர்.

ஒரு சுற்றுப்பயணம் செல்கின்ற போது பயணத்தில் அல்லாஹ்வுக்குறிய கடமைகளை நிறைவேற்ற வழங்கப்பட்டருக்கின்ற சலுகைகளை பயன்படுத்த தெரியாததன் விளைவே அடியார்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளில் தவறுவிடுவதற்கான அடிப்படைக் காரணமாகும் என நான் கருதுகின்றேன்.

அத்தோடு ஓர் இறை விசுவாசி திட்டங்களுடன் தனது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் அமைத்துக்கொள்ள வேண்டும்.ஏனெனில் அவனது முழு வாழ்வுமே இபாதத்தாக நோக்கப்படுகிறது.சுற்றுப் பயணத்தையும் இஸ்லாம் ஆகுமாக்கியிருக்கிறது.

எங்கு செல்ல வேண்டும்??
எப்படிச் செல்ல வேண்டும்???
பிரயாணத்தில் பேண வேண்டிய ஒழுங்குகள்???

தொழுகைகளுக்கான ஒழுங்குகள்….தங்க வேண்டிய இடங்கள் போன்ற அனைத்து விடயங்களையும் ஏலவே திட்டமிட்டிருக்க வேண்டும்.அப்போது தான் அசௌகரியங்கள் தவிர்ந்த பயணமாக, அப்பயணத்தை இபாதத்தாக ஆக்கிக் கொள்ள முடியும்.

அங்கு செல்லும் சகோதரர்கள் ஜும்ஆவுடைய கடமையை நிறைவேற்ற வேண்டுமாயின் அதற்குரிய ஏற்பாடுகளை நேரகாலத்தோடு செய்து கொள்ளுங்கள்.

ஹாவெலிய ஜும்ஆ மஸ்ஜித், நானுஓயா, ராகலை, ரேந்தபொல , பொரகஸ், பாதினாவெல, வெலிமடை போன்ற நுவரெலியாவை அண்டிய நகரங்களில் உள்ள பள்ளிவாயல்களில் ஜும்ஆவுடைய கடமையை நிறைவேற்றுவதன் மூலம் ஏனையோருக்கு இடர் இழைப்பதிலிருந்து தவிரந்துகொள்ளலாம்….

සුන්දර පරිසරය සුරකිමු அழகிய கண்கவர் சூழலைப் பாதுகாப்போம் என்ற வாசகத்துக்கு முன்னாேலயே எம்மவர் ஒருசிலர் குப்பைகளை வீசிச் சென்றனர். பண்பாடுகளால் வளர்ந்த அழகிய மார்க்கத்தைச் சுமந்தவர்கள் பண்பாடற்ற நடத்தைகள் மூலம் இஸ்லாதைக் கொச்சைப்படுத்திக் காட்டிவிட்டனர். பல கோடிகள் செலவளித்து உங்கள் கண்கவர் இடமாக மாற்றி அரசாங்கம் தந்தருக்க பொதுச்சொத்துக்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்ற முறையையே பெரும்பலானவர்கள் மறந்துவிட்டனர்.சுருங்கச் சொன்னால் நுவரெலியா தற்பொழுது துர்நாற்றம் வீசுகிறது.

இரவு நேரப் பாட்டுக்கச்சேரிகளில் எம் குமரிகளின் குத்தாட்டம்,மது இது போன்ற இன்னோரன்ன பாவங்களில் எமது சமூகம் பயணம் போனால் திரும்புவது நிச்சயமா என்ன??? இந்நிலையில் நான் மரணித்தால் ஈமானில்லாத நிலையில் மரணிப்பேனே என்ற பயம் எங்கே போனது,ஆடிக்கொண்டிருக்கும் பேது பூமி சுழி வாங்கி விட்டால் தப்புவது எங்ஙனம்???

பல இலட்சங்களை உல்லாசங்களுக்கு வாரி இறைக்கும் செல்வந்தர்கள் ஓர் ஏழைக் குமரியை கரைசேர்த்து விட்டால் அவள் அனுபவிக்கும் சந்தோஷத்தில் எழும் உங்களுக்கான பிரார்த்தனை உங்களை சுவனத்தில் சேர்க்குமல்லவா????

சிந்திப்போம் செயற்படுவோம். இடர்தரும் சமூகமாகவன்றி இடர்நீக்கும் சமூகமாக வாழ்து நெஞ்சில் சுமந்திருக்கும் அழகிய வாழ்க்கை நெறிக்கு சான்று பகர்வோம்.

-அஷ்ஷைக் ஸப்fரான் பின் ஜஃபர்
நுவரெலியா-

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares