நோன்புப் பெருநாள் நாளை மறுநாள் (29) கொண்டாடப்படும்

ஷவ்வால் மாதத்தின் தலைப் பிறை இன்று நாட்டின் எப்பாகத்திலும் தென்படாததனால், நாளையுடன் நோன்பை முப்பதாகப் பூர்த்தி செய்யுமாறு இலங்கை முஸ்லிம்களை கொழும்பு பெரிய பள்ளிவாயல் கேட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாயலில் இன்று (27) மாலை மஃரிப் தொழுகையின் பின்னர் கூடிய ஷவ்வால் மாதத்தின் தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாட்டில் இந்த தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது. பிறைக்குழு சார்பாக மௌலவி ஏ. டபில்யூ. எம். ரியாழ் இந்த அறிவித்தலை நாட்டு மக்களுக்கு தெரிவித்தார்.

10294417_739290776117082_2748757702220414181_n

10359233_739290676117092_6275784061328180349_n

10407795_739290709450422_5953422506257703022_n

10517706_739290779450415_6345126506196312336_n

10544307_739290692783757_7554077589898228734_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *