பகல கடுகன்னாவை பாறையில் சுற்றுலா சென்ற மாணவன் விழுந்து பலி – video

ஹங்கமுவ, பண்டாரகம பகுதியில் இருந்து வந்த பாடசாலையொன்றின் சுற்றுலா பஸ் பகல கடுகன்னாவைக்கு சென்ற 14 வயது மாணவன் ஒருவன் கடுகன்னாவ பகுதியிலுள்ள 200 அடி உயர பாறையிலிருந்து விழுந்து உயிரிழந்துளதாக மாவனல்லை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு  8 மணி அளவில்  இடம்பெற்றுள்ளது.உயிரழந்தவர் சமெட் புஸ்பகுமார (வயது 14) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரது சடலம் மாவனல்லை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மாவனல்லை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

video –  Hiru News

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *