பட்டப்பகலில் கேகாலை நிதி நிறுவனத்தில் ஏழரை லட்சம் கொள்ளை

கேகாலை நகர மத்தியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து ஏழரை லட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இக்கொள்ளைச் சம்பவம் நேற்று (11) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டி கொள்வனவு செய்ய வட்டிக்கடன் தேவை என வந்த இருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். கொள்ளைச் சந்தேகநபர்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளதால் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares