பணம் சம்பாதிக்கும் நோக்கம் என்னிடம் இல்லை – நபீர் கான் மரிக்கார்

அன்பின் வாக்காளர்களே!

மாவனல்லை பிரதேச சபைக்கு 2018ம் ஆண்டு சுயேற்சைக் குழுவொன்றை ஆரம்பித்து அதன் தலைவராக போட்டியிட கிடைத்தமைக்கு முதலில் அல்லாஹ்வூக்கு நன்றி செலுத்துகின்றேன்.

நான் சமூகத்திற்கு செய்த பாரிய சேவைகள் காரணகமாகவே என்னை தேர்தலுக்கு முன்வருமாறு பலர் என்னை துண்டினர்.

தற்போதைய சூழ்நிலையில் மாவனல்லையில் எமது சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை நோக்கத்தில் கொண்டு நான் தேர்தலுக்கு முன் நிற்க முடிவூ செய்தேன்.

1975ம் ஆண்டு தொடக்கம் ஹிங்குலோய சமூக அபிவிருத்தி இயக்கத்தின் (H.S.D.M) சமூக சேவைப்பகுதி தலைவராக எனது மக்கள் பணியை ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.

உங்கள் ஞாபகத்திற்காக பின்வரும் விடயங்களை முன் வைக்கின்றேன்.

முதலில் இலவச கபுரு தோண்டும் வேலையை ஆரம்பித்துடன் சிரமதானப்பணிகளையூம் ஆரம்பித்து பாதைகளை திருத்துதல் வீடுகளை புணர்நிர்மானம் செய்து சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மீலாத் விழாவை ஸாஹிரா கல்லூரியில் நடாத்தியமை உங்களுக்கும் நினைவிருக்கும்.

நான் அரசியல் கட்சிகள் ஊடாக பல வேலைத்திட்டங்களை ஹிங்குளோயா மக்களுக்கு கட்சி பேதமின்றி தனிப்பட்ட முறையிலும் பொதுவாகவூம் செய்துள்ளேன். பணம் சம்பாதிக்கும் நோக்கம் என்னிடம் இல்லை. மக்களுக்கு இன்னும் தொடர்ந்து சேவை செய்வதே எனது நோக்கம் ஆகும்.

பாடசலையில் அரசியல் வாதிகளின் அட்டகாசம், பள்ளியில் அரசியல் வாதிகளின்
பின்னணித் தலையீடு மேலும் அரசியல் வாதிகள் தங்களது அதிகாரங்களை பாவித்து செய்த வேலைகளும் செய்து கொண்டிருக்கும் வேலைகளும் உங்களுக்கு தெரியூம்.

இவைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். மேலும் இயக்கங்களினால் வேறுபட்டுள்ள எமது கிராமத்தை ஒற்றுமைப்படுத்த வேண்டியூள்ளது.

கடந்த காலத்தில் நான் ஒரு மந்திரியாக இல்லாது சாதாரண மனிதனாக இருந்து கொண்டு நான் செய்த ஒரு சில வேலைகளை முன்வைக்கின்றேன்.

1. 1995 ஆம் ஆண்டு முன்னாள் MP சுஹைர் அவர்களுடன் சேர்ந்து SDC யின் ஒத்துழைப்புடன்; ஸாஹிரா மத்திய கல்லுhpயை தேசிய பாடசாலையாக மாற்றம் பெற ஒத்துழைப்பு வழங்கினேன்.

2. ஸாஹிரா தேசிய பாடசாலைக்கு முதன் முதல் மேற்கத்தய Band SET (115 கருவிகளைக் கொண்ட) அப்போதைய உயர் கல்வி அமைச்சர் விஸ்வா வர்ணபாலவிடமிருந்து பெற்றுக் கொண்டமை.

3. ஸாஹிரா கேட்போர் கூடம் அப்போதைய அமைப்பாளர் வின்ஸன் பீரிஸ், அலிபாருக்
ஆகியவர்களுடன் இணைந்து பெற்றுக் கொள்ள ஒத்துழைத்தேன்.

4. மான்புமிகு பௌசி அமைச்சர் மூலம் ஸாஹிரா தேசிய பாடசாலைக்கு ஒரு Dental Unit பெற்றுக் கொடுக்க உதவி புரிந்தேன். ஆனாலும் இதுவரை அதற்கு ஒரு கட்டிடம் பெற்றுக் கொடுக்க யாரும் முன்வரவில்லை. அதே நேரம் கட்டிடத்தை பெற்றுக் கொடுக்க முயற்சித்தும் அப்போது பாடசாலையில் இருந்த அதிபரும் இன்னும் ஒரு சிலரும் இம் முயற்சிக்கு தடையாய் இருந்தார்கள்.

5. மாவனல்லை தேர்தல் தொகுதியில் 1996ம் ஆண்டு முதலில் ஸாஹிரா வீதியை அப்போதைய பெருந்தெருக்கள் அமைச்சர் பௌசி மூலம் காபட் செய்வதற்கு முன் நின்றேன்.

6. நீண்ட காலக் குறைபாடாய் இருந்த ஓவத்த பாலம் அப்பேதைய பெருந்தெருக்கள் அமைச்சர் பௌசி அவர்களை ஹிங்குள்ஓயா ஆற்றுப் பகுதிக்கு வரவழைக்கப்பட்டதன் மூலம் எமக்கு ஓவத்தைக்கு பயணம் செய்ய பாலம் ஒன்று அமைத்துக் கொடுக்க முன் நின்று உழைத்தேன்.

7. எமது பெண்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த Health Center ஒன்றைப் பெற்றுக்
கொடுத்தது. இதை நிறுவவிடாமல் மாவனல்லை வைத்தியசாலை MOH காரியாலயம் முட்டுக்கட்டை போட்டார்கள்.

வைத்தியசாலை பக்கத்தில் இருப்பதனால் தேவையில்லை என கூறப்பட்டது. எனது தனிப்பட்ட முயற்சியாள் 10 வருடங்கள் முயற்சித்து இன்றைக்கு சுமார் 20 லட்சம் பெறுமதியான காணியை கூட காலம் சென்ற ஹாஷிம் ஹாஜியாரிடமிருந்து இலவசமாக பெற்றுக் கொண்டு ஊர் மக்களுக்காக நிர்வகித்துக் கொடுத்தேன்.

இவ்வாறு நிறுவப்படாமல் இருந்தால் நீங்கள் மாவனல்லை வைத்திய சாலைக்கு முச்சக்கர வண்டி பிடித்துப் போய் சிரமப்பட வேண்டியிருக்கும்.

8. ஹிங்குலோயா ஜும்மாபள்ளி மையவாடி ஆற்றௌரமாக ஒரு மதில் அமைக்க பலம் வாய்ந்த ஒரு அமைச்சர் மூலம் ரூபா 500000 லட்சம் ஒதுக்கி அதற்கான அடித்தளம் போடப்பட்டது.

இப்படியான ஒரு பணத்தை நமது சமூக அமைச்சர்கள் மூலம் பெற்றுக் கொள்ள முடியாமை எமது அபாக்கியம். அது மட்டுமல்லாமல் அவர்களால் நாம் இன்னும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

9. இது தவிர ஸாஹிரா வீதி, மரிக்கார் மாவத்தை, ரிவசய்ட், வல்பொலதெனிய ஆகிய பகுதிகளில் இன்னும் பல அமைச்சர்களின் பணத்தின் மூலம் கொங்ரீட் பன்னப்பட்டது.

10. இது மட்டுமன்றி சிவில் பாதுகாப்பு கமிட்டியின் தலைவராய் இருந்த ஹிங்குலோய கிராமசேவகர் பகுதி, மரிக்கார் மாவத்தை இரண்டிலும் ஆற்றிய பணிகளின் மூலம் மாவனல்லை பொலிஸில் 56 பொலிஸ் பிரிவில் எனது தலைமையின் கீழ் இருந்த சிவல் பாதுகாப்பு கமிட்டி முதலாம் இடத்தைப் பெற்று விளங்குகின்றது.

11. இன்னும் பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றில் இருந்து செய்த சேசைகள் பல

12. மற்றும் ஊரில் அநியாயங்கள் நடைபெறும் இடத்தில் நியாயத்திற்காக குரல் கொடுத்த
சம்பவங்கள் ஏராளம்.

உதாரணமாக பாடசாலையில் அராஜகம் நடந்த போதெல்லாம் அதற்கு எதிராக போராடி
வெற்றி பெற்றது உங்களுக்கு நினைவிருக்கும்.

அன்பின் வாக்காளர்களே!

மந்திரி என்ற அந்தஸ்தில் இருந்த நபர்கள் செய்த வேலைகளையூம் ஒரு மந்திரி அந்தஸ்து இல்லாத நிலையில் நான் செய்த வேலைகளையூம் ஒப்பிட்டு பாருங்கள்.

ஒரு பிரதேச சபை மந்திரி பதவியாவது இருந்நிருந்தால் இதை விட பன்மடங்கு வேலை
செய்ய முடியூமாக இருந்திருக்கும். இவைகள் அத்தனையூம் நான் புகழ் வாங்கவோ பெயர் பெறவோ செய்தவை அல்ல.

நன்மை கருதியே செய்தேன். ஊர் மக்களில் அநேகருக்கு இவ்விடயங்கள் தெரியாததன் காரணத்தினால் தற்போதைய சூழ் நிலையில் இவைகளை மக்கள் மத்தியில் முன்வைக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளேன்.

எனவே சுயேற்சைக் குழு மான் சின்னத்திற்கு உங்கள் பொன்னான வாக்குகளை கொடுப்பதோடு சமூக நலனுக்காக பாடுபடும் சுயேட்சை குழு தலைவர் நபீர்கான் மரிக்கார் ஆகிய என்னை கூடிய வாக்குகளால் வெற்றி பெற செய்வதன் மூலம் பிரதேச சபையில் எனது சுயேட்சை குழு அங்கத்தவர்கள் கூடுதலாக தெரிவூ செய்யப்படுவர்.

பிரதேச சபை தவிசாளர் தெரிவூ செய்யூம் சந்தர்ப்பம் ஏற்படும் போது எமது தயவூ அவர்களுக்கு தேவைப்பட இடமுண்டு. இதன் மூலம் பேரம் பேசி எமக்கு ஒரு உப தலைவரை பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருப்பதனால் நீங்கள் நன்றாக சிந்தித்து உங்கள் பெறுமதியான வாக்குகளை மான்
சின்னத்ததுக்கு அளித்து சமூகத்துக்காக குரல் கொடுக்க கூடியவர்களை பிரதேச சபைக்கு அனுப்புமாறு அன்பாய் வேண்டுகிறேன்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *