பதிவு செய்யப்படாதுள்ள மஸ்ஜித்துக்களை பதிவு செய்துகொள்ளுமாறு வேண்டுகோள் – வக்பு சபை

இலங்கை வக்பு சபையில் பதிவு செய்யப் படாதிருக்கும் மஸ்ஜித்துக்கள் , மத்ரஸாக்கள் மற்றும் ஸாவியாக்கள் (ஐவேளை தொழுகை நடாத்தப்படுபவை) அனைத்தையும் தாமதமின்றி பதிவு செய்துகொள்ளுமாறு வக்பு சபை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது

பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் ஸாவியாக்கள் ஆகியன அமையப்பெற்ற காணி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் அவற்றினது பெயரிலேயே இருக்க வேண்டும். அவ்வாறானவை மாத்திரமே பதிவுக்காக ஏற்றுக்கொள்ளப்படும் என வக்பு சபை தலைவர் அஹ்கம் உவைஸ்குறிப்பிட்டுள்ளார் .

தனிநபர்களதும், தனியார் நிறுவனங்கள், அமைப்புகளினதும் பெயர்களில் இருக்கும் எந்தவொரு பள்ளிவாசலும் மத்ரஸாவும், ஸாவியாவும் பதிவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. வக்பு சபையில் பதிவு செய்வதாயின் அவை அமைந்திருக்கும் காணி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் அவற்றின் பெயரிலேயே இருக்க வேண்டும்.

பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் ஸாவியாக்களுக்கு காணி உள்ளிட்ட சொத்துக்களை வக்பு செய்பவர்கள் அவற்றை சட்ட ரீதியாக அவற்றின் பெயரிலேயே வக்பு செய்துவிட வேண்டும். இதில் ஒவ்வொவரும் கூடிய கவனம் செலுத்துவது அவசியம்.

ஏனென்றால் நம்பிக்கை அடிப்படையில் பள்ளிவாசலொன்றுக்கு வக்பு செய்யப்பட்ட காணியை வக்பு செய்தவரின் பேரப் பிள்ளைகள் நீதிமன்றத்தின் ஊடாக உரிமை பெற்று அக்காணியை விற்பனை செய்துள்ளனர்.

இதேவேளை சிலர் தங்களது பெயர்களில் பள்ளிக்குரிய காணியையும் சொத்துக்களையும் வைத்துன் கொண்டு இருக்கின்றனர். பள்ளிவாசலுக்குரிய சொத்துக்களையும் அவர்களது பெயர்களிலேயே கொள்வனவு செய்துள்ளனர். என தெரிவித்துள்ளார்.

mosque-2

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *