பதுரியாவிற்கு புகழை ஈட்டித்தந்த ஆசிரியர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி

அண்மையில் வெளிவந்த க.பொ.த சாதாரண பரீட்சையில் சபரகமுவ மாகாணத்தில் 6 மாணவர்கள் 9A க்களைப் பெற்று மாவனல்லை பதுரியா முன்னிலை வகிக்கின்றமையைத் தொடர்ந்து இப்பாடசாலைக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்த இப்பெறுபேற்றின் காரணகர்த்தாக்களாகிய அதிபர் ஆசிரியர்களை கௌரவிக்குமுகமாகவும் மிக நீண்ட காலம் இப்பாடசாலையில் சேவையாற்றி அண்மையில் இடம்மாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களின் சேவைகளை பாராட்டுமுகமாகவும் புதிதாக  மாவனல்லை பதுரியாவிற்கு சேவை இடமாற்றம் பெற்று வந்த ஆசிரியர்களை வரவேற்குமுகமாகவும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பழைய மாணவர் சங்கம்  பழைய மாணவியர் சங்கம் என்பன ஒன்றிணைந்து ஆசிரியர்களைப் பாராட்டும் வைபவமொன்றினை ஏப்ரல் 2ஆம் திகதி சணிக்கிழமை காலை 10.00 மணிக்கு மாவனல்லை வீனஸ் வரவேற்பு மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் ஆசிரியர்களின் சேவைகள் பாராட்டப்பட்டதோடு அதிபரும் ஆசிரியர்களும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக அசெய்க் A.C அகார் முஹம்மத் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இப்பாடசாலையின் அண்மைக்கால வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் பின்னால் அதிபர் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புக்களும் உழைப்புக்களும் இருப்பதோடு இப்பிரதேச மக்களின் ஒற்றுமையுமே இப்பிரதேசத்தில் இப்பாடசாலை முன்னிலை வகிப்பதற்கு முக்கிய காரணமாகும் என்பதனை விளக்கினார்.

க.பொ.த சாதார தரம் மட்டுமல்ல உயர்தர கலை வர்த்தக விஞ்ஞான மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளிலும் மாவனல்லை பதுரியா முன்னிலை வகித்து வருகின்றது. இப்பாடசாலையின் சிறந்த நிர்வாகம் ஆசிரியர்களின் அர்பணிப்புடனான சேவை பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பழைய மாணவர் சங்கம் பழைய மாணவியர் சங்கம் பதுரியா அபிவிருத்தி நிதியம் போன்ற அமைப்புக்கள் கடந்த பல வருடங்களாக ஓரணியில் நின்று இப்பாடசாலையை கட்டியெழுப்புவதற்காக உழைத்து வருகின்றமை என்பன இவ்வெற்றியின் பின்னால் மறைந்தள்ள இரகசியங்கள் ஆகும்.

12924504_1090940117593533_5723040837325887908_n 12924584_1090940930926785_6097946385601481904_n 12961722_1090941684260043_421916385301181043_n 12993443_1090940717593473_4211415155898542603_n

அசெய்க் A.C அகார் முஹம்மத் அவர்களின் முழுமையான சொற்பொழிவை பின்வரும் லின்க் இல் கேற்கலாம்

– Rifan Hussain-

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *