பதுரியா மத்திய கல்லூரியின் மூன்று மாடிக்கட்டத்தின் திறப்பு விழா

மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியில் ரூபா 2 கோடி 30 இலட்சம் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 15 வகுப்பறைகளுடன் கூடிய மூன்று மாடிக்கட்டத்தின் திறப்பு விழா கடந்த வெள்ளிகிழமை 23 ஆம் திகதி காலை 7.30 மணிக்கு நடைபெற்றது.

கல்லூரி அதிபர் எம்.ரி.எம். நிஸ்தார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக மாவனல்லை வலயக் கல்விப் பணிப்பாளர் என்.ஜி. தர்மதாசவூம் சிறப்பு அதிதியாக அஷ்ஷெய்க் யூசுப் முப்தி அவர்களும் கலந்து கொண்டனர்.

பதுரியா மத்திய கல்லூரியில் நீண்டகாலமாக இருந்து வரும் இடப் பற்றாக்குறைக்கு தீர்வாக இவ்வூரைச் சோர்ந்த தனவந்தார்கள் சிலாரின் உதவியூடன் 2 கோடி 30 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மூன்று மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடத்தில் 15 வகுப்பறைகள் அமைந்துள்ளன.

அத்துடன் 6 கோடி 40 இலட்சம் ரூபா செலவில் புதிதாக நிh;மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள மூன்று மாடிகளைக் கொண்ட மேலும் இரண்டு புதிய கட்டிடங்களின் நிர்மாணப் பணிகளின் இரண்டாவது கட்டத்தின் ஆரம்ப வேலைகளுக்கான அடிக்கல் நாட்டு வைபவமும் அன்றைய தினம் நடைபெற்றது.

1918 ஆம் அண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை 2018 ஆம் ஆண்டு 100 வருட நிறைவைக் கொண்டாடத் தயாராகி வருகின்ற வேலையில் பாடசாலையில் நிலவூம் குறைபாடுகளை நிவர்த்தி செய்து அங்கசம்பூர்ண பாடசாலையாக மாற்றியமைக்க வேண்டும் என்ற குறிக்கோளில் இப்பாடசாலையை அபிவிருத்தி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட பதுரியா அபிவிருத்தி நிதியம் இக்கட்டிய நிர்மாணப் பணிகளுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

கடந்த 96 வருடங்களாக இந்நாட்டின் கல்வித்துறைக்கு இப்பாடசாலை பாரிய பங்களிப்பைச் செய்து வந்துள்ள போதும் நிலவிய குறைபாடுகளில் அவ்வப்போது ஒருசில தேவைகள் நிறைவூ செய்யப்பட்டு வந்தாலும் அவை இன்றுவரையில் முழுமையாக நிறைவூ செய்யப்படவில்லை.

இன்றும் கூட உரிய வசதிகளுடன் கூடிய கேட்போர்கூடம் மற்றும் வசதியாக மாணவார்கள் கல்வி கற்பதற்கான வகுப்பறை வசதி இல்லாத நிலையில் இருந்து வரும் இப்பாடசாலைக்கு ஏனைய இரண்டு மூன்றுமாடிகளைக் கொண்ட கட்டிடத் தொகுதிகளும் நிர்மாணித்து முடிக்கப்படுகின்றபோது இடப்பற்றாக்குறைக்கு முழுமையாக தீர்வூகாணப்பட்ட இப்பிரதேசத்தில் ஒரு அங்க சம்பூர்ண பாடசாலை என்ற நிலையை இக்கல்லூரி அடைகின்றது.

இம்மூன்று கட்டிடத்தொகுதிகளையூம் நிர்மாணித்து முடிக்கின்றபோது ரூபா 8 கோடி 60 இலட்சம் செலவாகின்றது என்று மதிப்பபிடப்பட்டிருக்கின்றது.

– எம்.எஸ்.அமீர் ஹூசைன் –

10952097_784629721615309_1168537488_n-1422205110333

10945922_784629794948635_1172229062_n-1422205104401

10934469_784629631615318_200379329_n-1422205099708

10951490_784629594948655_1273321677_n-1422205107904

10934469_784629631615318_200379329_n

10945088_784629771615304_1521404062_n

10945922_784629794948635_1172229062_n

10951490_784629594948655_1273321677_n

10952097_784629721615309_1168537488_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *