பதூரியா கல்லூரி கட்டிட சர்சசை: மஹிபால ஹேரத் தலையீடு

3000 மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைக்கு கேட்போர் கூடத்திற்கான பாரியளவிலான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்ட கட்டடிடத்திற்கு சூழ்ச்சிகள் செய்து இடையூறு விளைவிப்பார்களாயின் அது மாணவர் சமுதாயத்திற்கு செய்யும் பெரும் அநீதியாகும் என சப்ரகமுவ முதல் அமைச்சர் மஹிபால ஹேரத் தெரிவித்தார்.

மாவனல்லை பதூரியா மத்திய கல்லூரியின் பாடசாலை மாணவர்களுக்கு பேண்ட் வாத்தியக் கருவிகள் கையளித்தல் மற்றும் 3 கோடி 55 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள கேட்போர் கூடத்தின் வேலைத் திட்டத்தை பார்வையிடும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம். டி. எம். நிஸ்தார் தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட முதல் அமைச்சர் மஹிபால ஹேரத் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

இதில் வலயக் கல்விப் பணிப்பாளர், கட்டிட நிர்மாணப் பொறியலாளர், பதூரியா அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் அல்ஹாஜ் எம். எம். எம். பதூத் மற்றும் கேகாலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் லத்திப் பாரூக் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

இந்தக் கட்டிடம் இல்லாமற் போவது மாணவர் சமுதாயத்திற்காகும். அது எமக்கு இல்லை. இதனுடைய முழுப் பயனையும் அடையப் போவது மாணவர் சமுதாயமாகும். இதை யார் தடுத்தாலும் இதற்காக பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர்கள் சங்கம் பாடசாலை அபிவிருத்தி நிதியம, பெறறோர்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புக்களும் ஒன்று பட்டு இக்கடிட்டி நிர்மாணப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.

எந்த தடையுமின்றி ஐந்து மாத காலத்திற்குள் இக்கட்டிட நிர்மாணகப் பணியை மிகவும் துரிதமாக முடித்தர வேண்டும் என நான் பொறியியலாளர்களுக்கு உத்தரவு விடுத்துள்ளேன்.

அடி மட்டத்தில் சிலர் சூழ்ச்சிகள் செய்கின்றனர் இதை யாரும் மறக்க வேண்டாம். இந்த கட்டிடம் இல்லாமற் போவது எமது மாணவச் செல்வங்களுக்காகும். ஒரு கிழமைக்கு சகல வேலைகளும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என கொந்திராத்தினைப் பெற்றுள்ள நபரிடம் கடுமையாக வலியுறுத்திக் கூறியுள்ளேன்.

உங்கள் பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதியே நான் இங்கு வந்துள்ளேன். ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு இன்னுமொரு பேண்ட் வாத்திய கருவியையும் நான் வழங்கவுள்ளேன். ஐந்து மாதத்திற்குள் இந்த கட்டிட நிர்மாணப்பணிகள் முடிக்கப்பட்டு மாணவர்களின் பாவனைக்காக ஒப்படைக்கப்பட வேண்டும்.

எங்களுக்கு தனிப்பிட்ட ரீதியில் எந்தவிதமான இலாபமும் கிடையாது. மாணவர் சமுதாயத்திற்காகத் தான் இந்த வளங்கள் அவசியமாகும். நமது பிள்ளைகள் படிக்கும் பாடசாலைக்கு வளங்கள் கிடைப்பதையிட்டு நாங்கள் சந்தோசப்பட வேண்டும். ஆனந்த கண்ணீருடன் இந்த கட்டிட நிர்மாணப் பணிகளுக்கு ஆதரவழங்குவதைப் பார்த்து மன மிகழ்வடைகின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சமீபத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தைப் பார்வையிட்ட முதல் அமைச்சர் மஹிபால ஹேரத் பொறியலாளர் மற்றும் கொந்துராத்துக்காரர் மற்றும் அதிகாரிகளிடம் வேலைகளை ஆரம்பித்து துரிதமாக முடித்துத் தர வேண்டும் என கடுமையான உத்தரவை விதித்தார்.

-இக்பால் அலி-

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares