பலஸ்தீன் சம்பந்தமாக குத்பா உரை நிகழ்த்துங்கள் – ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

இவ்வார ஜுமுஆவை பாலஸ்தீன் சம்பந்தமாக அமைத்துக்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கதீப்மார்களிடம் வேண்டிக்கொள்கிறது.images

யூதர்கள் நபிமார்களின் பரம்பரையிலிருந்து வந்தவர்கள். அவர்கள் அல்லாஹ்வுக்கு மாற்றம் செய்து நபிமார்களை கொலை செய்ததன் காரணமாக சபிக்கப்பட்டார்கள்.

மேலும், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நிஃமத்துக்களும் பறிக்கப்பட்டன.

சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட பைத்துல் மக்திஸ் யஹுதிகள், கிறிஸ்தவர்கள் மற்றும் மஜுஸிகள் வசம் கைமாறிமாறி இருந்தது.

இறுதியாக ஹழ்ரத் உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் பைத்துல் மக்திஸ் முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்பட்டது. நீண்ட காலம் வரை முஸ்லிம்களின் கைவசம் இருந்த பைத்துல் மக்திஸ், முஸ்லிம்களின் கருத்து மோதல்களாலும் மற்றும் பாவங்கள் அதிகரித்தமையாலும், அந்நியர்களின் சூழ்ச்சிகளினாலும் யஹுதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. இது முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாரிய ஒரு பின்னடைவாகும்.

முஸ்லிம்கள் இதைமீட்டெடுப்பதற்காக தற்போது பல தியாகங்கள் முயற்சிகள் செய்து வருகின்றனர்;. என்றாலும், அது இதுவரை கைகூடவில்லை. குறிப்பாக பலஸ்தீனில் வாழும் முஸ்லிம்கள் நாளாந்தம் பலஉயிர் இழப்புக்களையும், பொருட் சேதங்களையும், இன்னல்களையும் சந்தித்து வருகின்றனர். முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் ஒரு உடல் போன்றவர்களே உலகில் எந்தப் பகுதியில் இருந்தாலும் முஸ்லிம்களுக்குஒருசேதம் அல்லது அழிவு ஏற்பட்டு விட்டால் நாமும் அக்கவலையில் பங்கு எடுக்க வேண்டும்.

இலங்கைவாழ் முஸ்லிம்களாகியநாம் பைத்துல் மக்திஸ் வெற்றிக்காகவும் அங்குள்ள முஸ்லிம்களின் நிலைமைகள்சீராகுவதற்காகவும் எம்மால் இயன்ற பயனுள்ள முயற்சிகளைச் செய்வதற்குக்கடமைப்பட்டுள்ளோம். அவற்றில் முக்கியமாக பின்வரும் விடயங்களில் கவனத்தைச் செலுத்துவோம்.

உலகத்தில்நடக்கின்றஅனைத்தும்அல்லாஹ்வின் நாட்டப்படியேநடக்கிறதுஎன்றுநம்பும்; நாம்,எமதுபாவங்களினாலேயேநாம் சோதிக்கப்படுகின்றோம் என்பதையும் நம்புகின்றோம்.

அல்லாஹ்விடம் எங்களதுபாவங்களுக்காகவும் முழு முஸ்லிம்களின் பாவங்களுக்காகவும் தௌபாச் செய்வோம். மேலும்,அதிகமாகநல்லமல்களைச்செய்துஎமதுநிலைமைகளும் முழு முஸ்லிம்களதுநிலைமைகளும் சீராகுவதற்குஅல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.
எமக்குமத்தியில் உள்ளகுரோதங்கள்,பகைமைகள்,வஞ்சகங்கள் பொறாமைபோன்றவற்றைக் களைந்துஒற்றுமையைக் கடைபிடிப்போம்.
அந்நியர்களின் குறிப்பாக யஹுதி நஸாராக்களின் கலாச்சாரங்களைவிட்டும் எம்மைநாம் பாதுகாத்துக் கொள்வோம். இதுகுறித்துஎமதுவாலிபர்களுக்கும் வழிகாட்டுவோம்.
பைத்துல் மக்திஸின் வெற்றிக்காகவும் அங்குள்ள முஸ்லிம்களின் விமோசனத்திற்காகவும் எம்மால் முடியுமானஅளவுகுரல் கொடுப்போம்.
மேலும்,பைத்துல் மக்திஸ் முஸ்லிம்களுக்குரியது, அது யஹுதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுஎன்றசிந்தனைரீதியானமாற்றத்தை முஸ்லிம்அல்லாதவர்களிடம் உருவாக்குவதற்காகஎமதுவளங்களைப்பயன்படுத்துவோம்.
பைத்துல் மக்திஸ் மீண்டும் முஸ்லிம்கள் கையில் வரும். உலக முடிவின்போது நிச்சயமாக மஸ்ஜிதுல் அக்ஸாவும், பலஸ்தீன் புனித பூமியும் முஸ்லிம்களின் கைகளுக்கு வந்தே தீரும். இது குறித்தும் நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.“முஸ்லிம்கள் யூதர்களுடன் போர் செய்து யூதர்கள் கற்களுக்கும் மரங்களுக்கும் பின்னால் மறைந்திருந்து அந்தக் கல்லும் மரமும் முஸ்லிமே! அல்லாஹ்வின் அடியானே! இதோ எனக்குப் பின்னால் ஒரு யூதன் இருக்கின்றான். வந்து அவனைக் கொன்றுவிடு எனக் கூறும் நாள் வரும் வரை உலகம் அழியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), ஆதாரம்: முஸ்லலிம்)

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares