பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளி வெளியானது

2012 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 22943 மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வெட்டுப்புள்ளி விபரங்களை www.ugc.ac.lk என்ற இணைய முகவரியில் பார்வையிட முடியும்.

இம்முறை பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்ளும் மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி நவம்பர் மாதம் 24 திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஷெனிக்கா ஹிரிம்புரேகம  தெரிவித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *