பல சவால்­க­ளுக்கு மத்­தியில் வெற்றிகரமாக நடைபெற்ற SLTJ நிகழ்வு

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்தின் அல் குர்ஆன் சிங்­கள தொழி­பெ­யர்ப்பு வெளி­யீட்டு நிகழ்வு பல சவால்­க­ளுக்கு மத்­தியில் நேற்று மாலை கொழும்பு சுக­த­தாச உள்­ளக அரங்கில் மிக விம­ரி­சை­யாக நடை­பெற்­றது.

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்தின் தலைவர் முஹம்மத் றியாழ் தலை­மையில் நடை­பெற்ற இந்­நி­கழ்வில் அர­சியல் வாதிகள் சட்­டத்­த­ர­ணிகள் உல­மாக்கள் என ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் கலந்து கொண்­டி­ருந்­தனா்.

மாலை 4.15மணிக்கு ஆரம்­ப­மான நிகழ்வின் ஆரம்ப நிகழ்ச்­சி­யாக ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்தின் தலைவர் முஹம்மத் றியாழ் தலைமை உரை நிகழ்த்­தினார்.அத­னைத்­தொ­டர்ந்து துணைத்­த­லைவா் மௌலவி பா்ஸான் இளை­ஞா்­களின் எதிர்­காலம், துணைச்­செ­ய­ளாலா் மௌலவி ரஸ்மின் புரட்­சிப்­பா­தையில் தௌஹீத் ஜமாத் என்ற தலைப்­பு­களில் உரை­யாற்­றினார்.

அல் குர்ஆன் சிங்­கள தொழி­பெ­யர்ப்­பா­ளரும் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்தின் செயலாளருமான அப்துா் ராஸிக் அல் குா்ஆன் ஏன் மொழி பெயா்க்கப்படவேண்டும் என்ற தலைப்பில் சிங்கள மொழியில் உரையாற்றினார்.

அதனைத்தொடா்ர்ந்து குர்ஆன் சிங்கள தொழிபெயர்ப்பு வெ ளியிட்டு வைக்கப்பட்டது.நூலின் முதல் பிரதியை ஜக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுா் ரஹ்மான் பெற்றுக்கொண்டார்.

12188953_916832061697301_7326767102636280554_n

12191409_916831835030657_1102148752381317381_n

12219504_916831801697327_6402063008190391847_n

12227679_916831795030661_8736541520048151076_n

You may also like...

1 Response

  1. THASEEM says:

    உலமா சபை அதன் தார்மீக தன்மையை இழந்து விட்டது. அதன் ஆதிக்க பிடிலிருந்து தன்னை விடுவித்து கொண்டது ..இது முடிவா ஆரம்பமா ? சமுகத்துக்கு தேவை சாமர்தியமான தலைமைத்துவம் [ ஹாரூன் நபியின் சமயோசிதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *