பள்ளி நிர்வாகங்கள் ஊர்களை உயிர்ப்பிக்குமா ?

இலங்கை முஸ்லிம் சமூகம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. எவ்­வாறு இதி­லி­ருந்து மீள்­வது? ஒவ்­வொரு ஊரிலும் இதற்­கான முயற்­சி­களை எவ்­வாறு தொடங்­கலாம், நேர­டி­யா­கவோ மறை­மு­க­மா­கவோ நாம் எவ்­வாறு எம்மை தயார்­ப­டுத்த வேண்டும் என்­ப­தற்கு கீழே குறிப்­பிட்­டுள்ள சில ஆயத்­தங்­களை செய்­யலாம் என்று நினைக்­கின்றேன்.

வினைத்­திறன் கொண்ட பள்ளி நிரு­வாக சபைகள் உரு­வாக்­கப்­படல் 

எமது அனைத்து செயற்­பா­டு­க­ளையும் பள்­ளி­களின் நிரு­வாக கட்­ட­மைப்­பிற்கு உட்­பட்­ட­தாக மாற்­றப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும். இஸ்­லா­மிய சட்­ட­திட்டம் ஒவ்­வொரு ஊரிலும் நிறு­வப்­ப­டு­வ­தற்கும், அதற்­கான வழி­காட்­டல்­க­ளுடன் தொடர்­வ­தற்கும் எமது பள்ளி பரி­பா­லன சபைகள் விழித்­துக்­கொள்ள வேண்டும். எமது ஊர்­களில் ஒவ்­வொரு பள்­ளி­வா­சல்கள் நிரு­வாக உறுப்­பி­னர்கள் அப் பொறுப்­பிற்கு மிகவும் தகுதி வாய்ந்­த­வர்­க­ளாக இருப்­பது மிக அவ­சி­ய­மாகும்.

தலைவர் முதல் உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஊர் மக்­க­ளினால் ஏக­ம­ன­தாக தெரிவு செய்­யப்­பட்­ட­வர்­க­ளா­கவும், மார்க்க விட­யங்­களில் மட்­டு­மல்­லாது, சமூ­கத்தின் மீது மிக கரி­சனை உடை­ய­வர்­க­ளா­கவும், சொல், செயல், திறன்­களில் நேர்­மை­யு­டனும், சவால்­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும், சரி­யான கோணத்தில் கையா­ளக்­கூ­டி­ய­வர்­க­ளா­கவும் இருக்க வேண்டும்.

அதே­நேரம் தகு­தி­யா­ன­வர்கள் தெரிவு செய்­யப்­ப­டுதல் சரி­யான தீர்­மா­னங்­களை எடுப்­ப­தற்கு உத­வி­யாக இருக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை. அதேபோல் பல ஜும்ஆ பள்­ளி­களை கொண்­டுள்ள பிர­தே­சங்­களும், ஊர்­களும் உள்­ளன. இப்­பள்­ளி­களில் நிரு­வாக சபைகள் தமது கொள்­கை­க­ளையும், வேற்­று­மை­க­ளையும் முன்­னி­றுத்­தாமல் ஊரின் வளர்ச்­சிக்கு தங்­களின் நிரு­வாக அமைப்பின் மூலம் இப்­ப­ணி­களை தொடர்­வ­தினால் மட்­டுமே வினைத்­தி­ற­னான பயன்­களை எமது சமூகம் இவ்­வு­ல­கிலும், மறு­மை­யிலும் பெற்­றுக்­கொள்ள முடியும்.
இப்­ப­திவு யாரையும் தனிப்­பட்ட முறையில் குறை­காண்­ப­தற்கோ அல்­லது அவர்­களை விமர்­சிப்­ப­தற்கோ அல்ல, மாறாக கீழே குறிப்­பி­டப்­பட்­டுள்ள முன்­னெ­டுப்­பு­க­ளுக்கு இப்­ப­டி­யான நிரு­வாக சபை பெரிதும் பக்­க­ப­ல­மாக இருக்கும். இப் பரி­பா­ல­ன­சபை குறிப்­பிட்ட கால எல்­லையை கொண்­ட­தா­கவும், அதில் சரி­யான முறையில் திட்­ட­மி­டல்கள், நிகழ்ச்சி நிரல்கள் அமைக்­கப்­பட்டு அதை நோக்கி நகர்தல் பய­ன­ளிக்கும்.

வாராந்த ஜும்ஆ, சொற்­பொ­ழி­வுகள் மற்றும் பொது அறி­விப்­புகள்

ஒவ்­வொரு வாரமும் வெள்­ளிக்­கி­ழ­மை­களில் இடம்­பெ­று­கின்ற ஜும்ஆ சொற்­பொ­ழி­வா­னது எங்­களின் ஒரு சிறந்த ஊட­க­மாகும். மனி­தர்­க­ளா­கிய எங்­க­ளுக்கு அறி­வுரை சொல்­வ­தற்கும், பாவங்­க­ளி­லி­ருந்து விடு­ப­டு­வ­தற்கும் மட்­டு­மல்­லாது பல முக்­கி­ய­மான விட­யங்­களை ஜும்ஆ சொற்­பொ­ழி­வுகள் மூலம் முன்­னெ­டுக்­கலாம்.
சொற்­பொ­ழி­வுகள் நிகழ்த்­தப்­படும் தலைப்பு காலத்­திற்கு ஏற்­ற­தாக இருக்க வேண்டும், சொற்­பொ­ழிவு நிகழ்த்­தக்­ கூ­டிய உல­மாக்­களின் அறிவு, அனு­பவம் மீள்­ப­ரி­சீ­லனை செய்­யப்­ப­டு­வது மிக அவ­சி­ய­மாகும். காரணம் இச் சொற்­பொ­ழிவு முஸ்­லிம்­க­ளா­கிய எங்­க­ளுக்கு மட்­டு­மல்­லாது ஊரில் வாழக்­கூ­டிய மாற்று மத சகோ­த­ரர்­க­ளுக்கும் இதன் மூலம் நிகழ்­வு­களின் உண்­மைத்­தன்­மை­யையும், பிர­யோ­ச­ன­மான செய்­தி­க­ளையும் தெரி­யப்­ப­டுத்­து­வதன் அவ­சியம் இருக்­கின்­றது. எனவே பிரச்­சாரம் செய்­யக்­கூ­டிய உல­மாக்கள் மார்க்க விட­யங்­களில் மட்­டு­மல்­லாது உலக அன்­றாட விட­யங்கள், அர­சியல், விஞ்­ஞானம் போன்ற பல துறை­களை கற்­றுத்­தேர்ந்­த­வர்­க­ளாக அல்­லது அது பற்­றிய சரி­யான தெளி­வுடன் இருப்­பது மிக அவ­சி­ய­மாகும். அதேபோல் சலிப்பும் வெறுப்பும் இல்­லாமல் மக்­களின் எண்­ணங்­களை ஒரு­நி­லைப்­ப­டுத்தி சொற்­பொ­ழி­வு­களை நிகழ்த்­தக்­கூ­டிய பேச்­சுத்­திறன், அறி­வாற்றல், பல மொழித்­திறன் இருப்­பது அவ­சி­ய­மாகும். இது போன்ற சிறந்த உல­மாக்­களை, மௌல­வி­மார்­களை உரு­வாக்­கு­வ­தற்­கான செயற்றிட்­டங்கள், பாடத்­திட்­டங்கள் மத்­ர­ஸாக்­களில் சிறந்த முறையில் ஆரம்­பிக்­கப்­பட வேண்டும். தேர்ச்சி பெற்ற உல­மாக்­களை எமது ஊர்­க­ளிலும் சொற்­பொ­ழி­வு­களை நடாத்த ஏற்­பா­டு­களை பள்ளி நிரு­வாகம் சிரமம் பாராது முன்­னெ­டுக்­க­வேண்டும். பிர­சங்­கத்தின் தலைப்பு, உரை­யாற்­று­ப­வரின் பெயர் விப­ரங்கள் முன்­கூட்­டியே பள்ளி அறி­விப்­புப்­ப­ல­கையில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

பல்­லின மக்கள் வாழும் பிர­தே­ச­மா­கவும், நாடா­கவும் இருக்கும் நாம் எல்லா மத மக்­க­ளையும் நேசிக்­கவும் பழ­கவும் கட­மைப்­பட்­டுள்ளோம், எமக்கும் அவர்­க­ளுக்கும் உள்ள இன ஒற்­று­மை­யையும் மத வேற்­று­மை­யையும் சரி­யாக புரிந்­த­வர்­க­ளாக எமது முன்­னெ­டுப்­புகள் இருக்­க­வேண்டும். அவர்­க­ளுடன் கலந்து போனாலும் கரைந்து போகாமல் இருக்க வேண்­டிய அடிப்­ப­டையை சரி­யாக பிரித்து அறி­யப்­ப­டாமை பல சிக்­கல்­களை தோற்­று­விக்­கின்­றன. இதற்­கான விளக்­கங்­களும் எமது உல­மாக்­க­ளினால் அனைத்து தரப்பு மக்­க­ளுக்கும் எடுத்துச் சொல்­லப்­ப­ட­வேண்டும்.

ஊரின் சனத்­தொகை கணிப்­பீடு
முஸ்­லிம்கள் நாம் வாழக்­கூ­டிய ஊர்­களில், பள்ளி நிர்­வா­கங்­க­ளி­னூ­டாக ஊரின் சனத்­தொகை கணக்­கீடு செய்­யப்­ப­டுதல் ஒரு முக்­கிய அம்­ச­மாகும். தற்­போது பள்ளி நிர்­வா­கங்கள் ஊர் மக்­க­ளிடம் இருந்து சந்தா அற­வி­டு­வ­தற்கு மாத்­தி­ரமே வீடு­களின் விலா­சங்­க­ளையும் வீட்டுத் தலை­வரின் பெய­ரையும் திரட்டி வைத்­துள்­ளார்கள். இது சந்­தா­விற்கு மட்­டு­மாக இல்­லாது ஒவ்­வொரு ஊர்­க­ளி­லு­முள்ள குடும்­பங்­களின் எண்­ணிக்கை, உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை, அவர்­களின் தொழில், வியா­பாரம், மற்றும் ஒவ்­வொரு துறை சார்ந்­த­வர்­க­ளி­னதும் கணிப்­பீடு என்­பன திரட்­டப்­பட்டு உள்­ள­டக்­கப்­பட வேண்டும். இத் தர­வுகள் பள்ளி நிரு­வா­கத்தின் மேற்­பார்­வையில் இருக்­கலாம், அதேபோல் வரு­டாந்தம் இத் தர­வுகள் ஊரின் நில­வ­ரத்­துடன் ஒப்­பீடு செய்­யப்­பட்டு புதுப்­பிக்­கப்­பட வேண்டும்.
இவ்­வாறு நாம் சேக­ரிக்கும் தக­வல்கள், ஊரினால் அல்­லது அமைப்­பு­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­படும் விட­யங்­க­ளுக்கு பக்­க­ப­ல­மா­கவும், உத­வி­யா­கவும் இருக்கும்.

 

ஊரில் இயங்கும் தொண்டர் அமைப்­பு­க­ளுடன் பள்ளி நிர்வா­கத்தின் தொடர்­புகள்
எமது ஊர்­களை பொறுத்­த­வ­ரையில் பல தொண்டு மற்றும் இளைஞர் சம்­பந்­தப்­பட்ட அமைப்­புகள் / இயக்­கங்கள் இயங்­கிக்­கொண்­டி­ருக்­கின்­றன. இவைகள் ஒரு வரை­ய­றைக்கு உட்­பட்­ட­வர்­க­ளாக தம்மாலான முயற்­சி­க­ளையும், உத­வி­க­ளையும் ஊர் மக்­க­ளுக்கு செய்­து­வ­ரு­கின்­றார்கள். இவ் இயக்­கங்கள் ஊரின் அபி­வி­ருத்தி, கல்வி வழி­காட்டல், சுய­தொழில் ஊக்­கு­விப்பு, வறிய குடும்­பங்­க­ளுக்கு/ மாண­வர்­க­ளுக்கு உத­வுதல் போன்ற பல நற்­கா­ரி­யங்­களை நேர­டி­யா­கவோ அல்­லது திரைக்­குப்­பின்னால் செய்து கொண்­டி­ருப்­பார்கள். இதனால் எத்­த­னையோ குடும்­பங்கள், இளைஞர் யுவ­திகள், சிறு­வர்கள் பய­ன­டை­கின்­றனர்.  தமது வேலை­க­ளையும், நேரங்­க­ளையும் பாராது தம்மால் முடிந்த உத­வி­களை செய்யும் இவ் இயக்­கங்கள் பாராட்­டப்­பட வேண்டும். இவர்கள் பற்­றிய விப­ரங்­களை பள்ளி நிரு­வா­கங்கள் அறிந்­தி­ருப்­பது சிறந்­தது. அதேபோல் ஒரு சிறப்­பான நிரு­வா­கத்தை பள்ளி பரி­பா­லன சபை கொண்­டி­ருக்கும் போது இவ்­வா­றான இயக்­கங்­க­ளுக்கு தேவை­யான உத­விகள்/ ஒத்­தா­சைகள் பள்ளி நிர்வா­கங்­க­ளி­னூ­டாக முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும்.
ஒவ்­வொரு ஊரிலும் இருக்கும் தன­வந்­தர்கள், வெவ்­வேறு துறை­களில் சாதித்­த­வர்­களின் ஒத்­து­ழைப்பு அவ்­வூரின் அபி­வி­ருத்­தி­க்கு முக்­கி­ய­மா­ன­தாகும். இவர்­களை பள்ளி நிரு­வா­கத்­தி­னூ­டாக அணு­குதல், அவர்­களின் மூலம் உத­வி­களை பெற்று ஊரின் அபி­வி­ருத்­தி­க்கு மற்றும் தொண்டு நிறு­வ­னங்­க­ளுக்கு பங்­க­ளிப்பு செய்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் ஒழுங்கு படுத்­தப்­பட வேண்டும்.

கல்வி தொடர்­பான கருத்­த­ரங்­குகள் / பரீட்சை வழி­காட்­டிகள் என்­ப­ன­வற்றின் அவ­சியம்

எமது நாட்டில் பின்­தங்­கிய மாவட்­டங்­க­ளா­கவும், நகர்ப்­புற வச­தி­களை இல­குவில் அடைந்து கொள்ள முடி­யா­மலும் எத்­த­னையோ ஊர்கள் உள்­ளன. இங்கு வாழும் மக்­க­ளுக்கு கிடைக்­கக்­கூ­டிய பாட­சாலைக் கல்வி மட்­டுமே எல்லாப் பிர­தே­சங்­க­ளையும் போன்று கிடைக்­கப்­பெ­று­கின்­றன. இருந்த போதும், வாழும் ஊரின் சூழல், பாட­சா­லையில் உள்ள வளங்­களை ஒப்­பிட்டு நோக்­கினால், இப் பின்­தங்­கிய பிர­தே­சங்­க­ளி­லுள்ள மாண­வர்­க­ளுக்கு கிடைக்கும் கல்­வித்­தரம் குறை­வா­னதே.

இதன் அடிப்­ப­டை­யி­லேதான் 5 ஆம் ஆண்டு புல­மைப் பரிசில் ­ப­ரீட்சை, உயர்­தர Z-score ஆகிய வெட்­டுப்­புள்­ளிகள் மாவட்ட ரீதி­யாக நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்ளன. இதுவே நமது பின் தங்­கிய பிர­தே­சங்­களின் மற்றும் வசதி குறைந்த ஊர்­களின் கல்­வியின் நிலைப்­பாட்டை பிர­தி­ப­லிக்­கின்­றன. இந்­நி­லையில் அர­சாங்­கத்தின் மூலம் இவ்­வா­றான பிர­தே­சங்­களை வலுப்­ப­டுத்­து­வது என்­பது கடி­ன­மான காரி­ய­மாகும் என்றே கூறலாம். எமது சமூ­கத்தின் வளர்ச்­சி­யினை அதி­க­ரிக்க வேண்டும் என்று எண்ணும் நாங்கள் எமது நாட்டின் அர­சாங்­கத்தின் உத­வி­களில் முழு­வ­து­மாக தங்­கி­யி­ருப்­பது பய­ன­ளிக்­காது.
இதற்கு பல கார­ணி­க­ளாக நாட்டின் பொரு­ளா­தாரம், கடன், அர­சி­யல்­வா­தி­களின் ஊழல், அரச ஊழி­யர்­களின் பொடு­போக்கு என்று பல விட­யங்­களை குறிப்­பி­டலாம். இங்கே குறிப்­பிடும் பிழை­யான நபர்­களின் எண்­ணிக்கை அதி­க­ளவில் இருப்­பதே இதற்கு மூல காரணம், மாறாக எனது பதிவு அனை­வ­ரையும் குறிப்­பி­டாது என்­பதைக் கூறிக்­கொள்­கிறேன்.
இதற்கு தீர்வு காணும் வகையில் நாம் எமது பிர­தே­சங்­களில் உள்ள மாணவ மாண­வி­க­ளுக்­கான கல்­விக்­கூ­டங்­களை நிறு­வுதல், வகுப்­பு­ரீ­தி­யாக அல்­லது வய­து­ரீ­தி­யான கருத்­த­ரங்­குகள், பரீட்சை வழி­காட்­டிகள் போன்ற விட­யங்­களை தொட­ர­வேண்டும். பாட­சாலை மூல­மாக நடை­பெறும் இதர கல்­விசார் (உதா­ர­ண­மாக: பேச்சு, கட்­டுரை, விஞ்­ஞான, விளை­யாட்டு) திட்­டங்­களில் இவர்­களை ஊக்­கப்­ப­டுத்­து­வதும், பங்­கு­பெ­றச்­செய்­வதும் அவ­சி­ய­மாகும். அதேபோல் தொழில்­வாய்ப்­புகள், அர­சியல், சமூ­க­வியல், பொது­அ­றிவு, உள­வியல் சம்­பந்­த­மான கருத்­த­ரங்­கு­களும், வழி­காட்­டல்­களும் இன்­றி­ய­மை­யாத விட­யங்­க­ளாகும்.இவைகள் பணத்தை நோக்­க­மாக கொண்­டி­ருக்­காமல், வறிய மற்றும் எல்­லாத்­த­ரப்பு மாண­வர்­க­ளையும் வழி­காட்­டு­வ­தாக அமை­ய­வேண்டும்.

நூலகம் / விளை­யாட்டு மைதானம் போன்­ற­வற்றின் அவ­சியம்

ஒவ்­வொரு ஊரி­லு­முள்ள எமது சிறு­வர்கள், இளை­ஞர்கள், யுவ­தி­களை வழி­ந­டாத்தல்/ ஊக்­கப்­ப­டுத்­துதல் அவ­சி­ய­மாகும். இவர்­களின் சிறந்த வாழ்க்­கைக்கு குடும்பம், பாட­சாலை, சுற்­றுப்­பு­றச் சூழல், பள்ளி என்­பன பிர­தான கார­ணி­க­ளாகும். எனவே அவர்­களை வழி­த­வ­ற­வி­டாமல் ஒரு நிலைப்­ப­டுத்தல், திற­மைக்கு ஆக்க பூர்­வ­மான முறையில், இஸ்­லா­மிய கோட்­பாட்­டிற்கு கட்­டுப்­பட்­ட­வர்­க­ளா­கவும், ஒழுக்க விழு­மி­யங்­களை பேணு­த­லாக கடை­ப்பி­டிக்­கக்­கூ­டி­ய­வர்­க­ளா­கவும் வளர்க்க ஒவ்­வொரு ஊரும் முன் வர­வேண்டும். இவர்­களில் மறைந்­துள்ள கல்வி மற்றும் ஏனைய துறை­சார்ந்த திற­மை­களை இனங்­கண்டு அதற்­கான ஆயத்­தங்­களை எடுப்­பது நமது ஊரின்  முன்­னெ­டுப்­பு­க­ளி­லேயே தங்­கி­யுள்­ளது.
அதற்­காக ஒவ்­வொரு ஊர்­க­ளிலும் பொது நூல­கங்கள், விளை­யாட்டு மைதானம், உடற்­ப­யிற்சி கூடங்கள், நீச்சல் தடா­கங்கள், தற்­காப்­புக்­கலை போன்ற வெவ்­வேறு துறை­சார்ந்த விட­யங்கள் ஆரம்­பிப்­பதும், நடத்­து­வதும், அதன் மூலம் பயிற்­சிகள் வழங்­கு­வதும் மிக அவ­சி­ய­மாகும். இவ்­வா­றான வளங்­களை அதி­க­ரிப்­பதன் மூலம் விடை­கி­டைக்கும் என்று எண்ணு­கிறேன். இவைகள் நமக்கு சிர­ம­மாக இருப்­பது போன்று தோன்­றி­னாலும், எம் அனை­வ­ரது ஒத்­து­ழைப்­புடன் இதற்­கான ஆயத்­தங்­களை மேற்­கொள்­வது எமது எண்­ணங்­களை பூர்த்­தி­யாக்கும் இன்ஷா அல்லாஹ். இஸ்­லா­மிய வரை­ய­றைக்கு உட்­பட்­ட­தாக இவ்­வா­றான பல நல்ல பொது விட­யங்­களை ஒவ்­வொரு ஊரிலும் வளரும் சிறு­வர்கள், இளைஞர் யுவ­தி­க­ளுக்கு கிடைக்­கச்­செய்­வ­தினால் அவர்­களில் மறைந்­துள்ள திற­மை­களை இனங்­காணவோ அல்­லது அவை­களை வளர்த்­துக்­கொள்­வ­தற்­கான சந்­தர்ப்­பத்தை நாம் ஏற்­ப­டுத்­திக்­கொ­டுக்­கலாம். இளை­ஞர்­க­ளுக்கு போன்றே எமது ஊர்­களில் வாழும் யுவ­தி­க­ளுக்கும் இவ்­வா­றான வளங்­களை உப­யோ­கிப்­ப­தற்கு, பரீட்­சித்­துப் ­பார்ப்­ப­தற்கும் அவ­கா­சங்கள் வழங்­கப்­பட வேண்டும். அவர்­க­ளது அறிவு, ஆரோக்­கியம், திறமை என்­பன அவர்­க­ளுக்கு மட்­டு­மல்­லாது நாளை உரு­வாகும் குடும்­பங்­க­ளி­னதும், பிள்­ளை­களின் எதிர்­கா­லத்­திற்கு இன்­றி­ய­மை­யா­தது.

யுவ­திகள் மற்றும் பெண்­க­ளுக்­கான விழிப்­பு­ணர்வு மற்றும் வழி­காட்­டல்கள்
ஆண்­களை பொறுத்­த­வ­ரையில் கல்வி மற்றும் ஏனைய துறைகள் சார்ந்த அறி­வையும் அனு­ப­வத்­தையும் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான சூழல் அதி­க­மாக உள்ள நிலையில் எமது வீடு­க­ளி­லுள்ள பெண்கள், யுவ­திகள் தொடர்­பான விட­யங்­களில் நாம் மிக சிரத்­தை­யுடன் பல முன்­னெ­டுப்­பு­களை எடுக்க வேண்­டி­யுள்ளோம். இந்த கால­கட்­டத்­திலும் அவர்கள் பெண்கள் தானே என்று அவர்­க­ளுக்­கு­ரிய எந்த வித­மான முன்­னெ­டுப்­பு­க­ளையும், அறி­வையும் வழங்­காமை குடும்­ப­மாக மட்­டு­மல்­லாது பல சமூக நிலை அவ­லங்­க­ளுக்கு ஆளா­கின்றோம். ஏரா­ள­மான தரப்­பி­லுள்ள பெண்கள் எமது ஊர்­களில் இருக்­கின்­றார்கள். குடும்ப வறு­மை­யினால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள், பாட­சா­லைக்கு கல்­வியில் பிர­கா­சிக்­கா­த­வர்கள், சாதா­ரண தரத்தின் பின் பாட­சாலைக் கல்­வி­யினை தொட­ரா­த­வர்கள், இள­வ­யதில் வித­வை­யா­ன­வர்கள், வயது வந்தும் திரு­ம­ண­மா­காத பெண்கள் போன்று பல­த­ரப்­பிலும் உள்ள பெண்­களை நாம் உடல் மற்றும் உள­வியல் ரீதி­யாக முடக்­கிப்­போட்­டுள்ளோம் என்­பதே வேதனை கலந்த உண்மை.
கிணற்­றுத்­த­வ­ளைகள் போல் பெண்­களை பூட்­டி­வைத்­து­விட்டு, நாம் விடியலைத் ­தே­டு­வது கடை­சி­வ­ரைக்கும் கன­வா­கவே கழியும் என்­ப­துவே உண்மை. இன்­றைய உலகில் எத்­த­னையோ பெண்கள் வர­லாற்றில் நீங்கா இடம்­பி­டித்த ஆளு­மை­க­ளா­கவும், உலக சரித்­தி­ரத்தை தமது முயற்­சி­க­ளினால் எட்­டிப்­பி­டிப்­ப­வர்­க­ளா­கவும் உரு­வாகிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது எமக்கு தெரியும். இது போன்ற பெண்கள் எமது சமூகத்திலும் உருவாக வேண்டும். அவர்கள் நாளைய தாய்மார்கள். அவர்களின் அறிவு, ஞானம், அனுபவம் சிறந்த தலைமுறைகளை உருவாக்க கடமைப்பட்டுள்ளதை ஏன் நாம் மறந்துவிட்டோம்?
எமது இஸ்லாமிய மார்க்கத்திற்கு உட்பட்டதாக ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் வழிநடாத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இதற்கு எமது ஊர்களில் பெண்களுக்கு மேலே நான் குறிப்பிட்ட இதர வளங்களை கிடைக்கக்கூடியதாக மாற்ற வேண்டும். அதேபோல் இஸ்லாமிய கல்விக்கூடங்கள் நிறுவப்பட வேண்டும். இவைகள் தாம் உள்ள கொள்கைகளை முன்னெடுப்பதற்காக அன்றி இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகள், சட்ட திட்டங்கள், சித்தாந்தங்களை தெளிவாக அவர்களுக்கு வழங்குவதுடன், உலக அரசியல், பொது அறிவு, உளவியல் மற்றும் ஒழுக்க விழுமியங்களை புகட்டும் நிலையங்களாக மாற்ற வேண்டும்.

மேலே குறிப்பிட்டது போன்று  வறிய மற்றும் எல்லா தரப்பிலுமுள்ள பெண்களுக்குமான நிதி சார்ந்த மற்றும் ஏனைய உதவிகள் செய்யக்கூடிய அமைப்புகள், திட்டங்கள், சேவைகள் என்பன ஒவ்வொரு ஊரிலும் நிறுவப்பட வேண்டும். ஆண்கள் பெண்கள் என்ற இருசாராரும் பெற்றோர்களினதும், ஊரில் இயங்கும் இஸ்லாமிய நிலையங்களின் கண்காணிப்பில் வளர வேண்டிய கட்டாயம் உள்ளது.
இவ்வாறான வளங்கள் இலகுவாக கிடைக்கும் போது அதன் பயன்பாடு அதிகரிக்கும், அதேநேரம் அவ்வளத்தின் பிரயோகம் பல திறமைசாலிகளை எங்களுக்கு அறிமுகப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இன்றைய உலகம் ஒவ்வொருநாளும் பல புதிய துறைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது, இதற்கு நாமும் தயாராவது எங்களது, சிந்தனை, ஒத்துழைப்பு, உழைப்பு எனும் காரணிகளில் தங்கியுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்ட விடயங்களானது எமது சமூகம் எதிர்நோக்கும் பல சமகால பிரச்சினைகளை முன்வைத்தே குறிப்பிடப்பட்டுள்ளன. இங்கு சொல்லப்பட்டவைகள் மிகச் சில விடயங்களே. எமது அன்றாட பிரச்சினைகளையும், அதற்கான தீர்வுகளையும் எழுதுவதன் நோக்கம் வாசிக்கக்கூடிய என்னிலும், உங்களதும் உள்ளங்கள் மாறவேண்டும், அதற்கான உழைப்புகள் எமது ஊர்களில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே.

நன்றி விடிவெள்ளி

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *