பாடசாலைகளின் புறச்சூழலில் போதைப் பொருள் சுற்றிவளைப்புக்கள்

பாடசாலைச் சுற்றுச் சூழல் பகுதியிலுள்ள போதைப் பொருள் பாவனையாளர்களை கண்டுபிடித்து, கைது செய்வதற்கான சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ் மா அதிபருக்கு விசேட பணிப்புரையொன்றை விடுத்துள்ளார்.

பாடசாலைக்கு வெளியிலும், பாடசாலைக்குள்ளும் இடம்பெறுவதாக முன்வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் முறைப்பாடுகளை கருத்தில் கொண்டே இந்த உத்தரவை ஜனாதிபதி பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோனுக்கு விடுத்துள்ளார்.

கேரளா கஞ்சா(KG), பாபுல், பீடா, தூள், மோதகம், போதையூட்டும் பாணிகள் போன்றவற்றை குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் திட்டமிட்ட செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தமக்கு கிடைக்கப் பெற்றுள்ள பொதுமக்கள் முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபரிடம் சுட்டிக்காட்டியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

06-1354775402-drugs2-600

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares