பாடசாலை உபகரணங்கள் விநியோகிக்கும் நிகழ்வில் சிங்கள,தமிழ் மாணவர்களையும் சேர்த்துக் கொண்ட ஒவத்தை கிராம மக்கள்

மாவனல்லை ஸாஹிரா தேசிய பாடசாலைக்கு மிகவும் அன்மையிலே அமைந்திருக்கின்ற ஒரு சிறிய கிராமமே ஓவத்தை கிராமமாகும். இக்கிராமத்தில் அல்லாஹ்வின் திருப்தியை இலக்காகக்கொண்டு பல முன்னேற்றகரமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன அல்ஹம்துலில்லாஹ்.

அந்த வகையில் கடந்த மூன்று வருடங்களாக மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்ற வசதி குறைந்த மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் விநியோகிக்கின்ற நிகழ்வு இம்முறை எமது கிராமத்திலே இருக்கின்ற முஸ்லிம்,சிங்கள,தமிழ் மாணவர்களையும் சேர்த்து மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது.

இப்பொதிகள் 70 க்கும் அதிகமான மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்நிகழ்வை எமது கிராமத்தை சேர்ந்த புளு மற்றும் கண்டி Blood Bank இல்  கடமை புரிகின்ற கௌரவ  Chathura Bandara அவர்களும், தக்கியா நிர்வாகிகள், ஊர் சகோதரர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியின் இறுதியில் கருத்துத் தெரிவித்த (சிங்கள தேசிய பாடசாலையொன்றிலே சிறப்பாக கல்வி கற்கின்ற ஒரு எளிய) மாணவர், வசதி குறைந்த மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு மிகவும் வரவேற்கத்தக்கது என்றும் இது எம்மை கல்வி கற்க ஆர்வப்படுத்துகிறது என்றும் இது போன்ற இன்னும் பல நிகழ்வுகள் எம் சமூகத்தில் இடம்பெற வேண்டும் என்றும் கூறினார்.

BY: பாஸில்

download (61)

e00991ac2988f44813d48c9ef47da2d2141d7fb4e07e4286387ef8409c6be11e7d563223aa9b20e71fc418d7e08cdf262378b0d4318b39b96fb113570b9413ba70d1dec364b40c42bf05b182d592377fb8d20b5a1427104e6172776df67915713 e00991ac2988f44813d48c9ef47da2d2141d7fb4e27e4286387ef8409c6be11e7d563223aa9b20e71fc418d7e08cdf263279b6d6318b39b969b5135408fb7eb970d1d7ca64b50944bb0db088d6f95979bdd10b511622194b6172776df67915713 e00991ac2988f44813d48c9ef47da2d2141d7fb4e37e4286387ef8409c6be11e7d563223aa9b20e71fc418d7e08cdf262378b0d431ce3da26eb2135360f910ba70d8d7c363bc0e41ba08b180bafc337ab9d102511525102250323377e115713 e00991ac2988f44813d48c9ef47da2d2141d7fb4e47e4286387ef8409c6be11e7d563223aa9b20e71fc418d7e08cdf262479bbd6318b39b96cb814550ff27eb970d1d7ca64b50a44bb0db088d6fa597fb9d7045c112016450d433729ec6ed715713

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares