பாணந்துறை நோலிமிட் நிறுவனம் தீக்கிரை – (படங்கள் இணைப்பு)

இலங்கையின் முன்னணி ஆடை விற்பனை நிலையங்களில் ஒன்றான நோலிமிட்டின் பாணந்துறை காட்சியறை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3 மணியளவில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் மூலமே குறித்த தீ வைக்கப்பட்டுள்ளதாகவும், தீ வேகமாகப் பரவி வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில்,அதிகாலை 3 மணியளவில் தனக்கு தொடராக 6 வெடிச்சத்தங்கள் கேட்டதாக, குறித்த கட்டடத்துக்கு அருகாமையில் வசிக்கும் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்திருக்கிறார்.

சம்பவம் நடந்த இடத்துக்கு வருகை தந்த தீயணைப்புப் படையினரின் பவுசர் வண்டிகளில் தீயை அணைப்பதற்கான தண்ணீர் வசதி இல்லாமல் இருந்ததே கட்டடம் முற்றாக நிர்மூலமானதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்வம் நடைபெற்ற வேளை குறித்த நிறுவனத்தின் ஊழியர்கள் நால்வர் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த போதும் அவர்களுக்கு எதுவித உயிராபத்துக்களும் ஏற்படவில்லை

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தீயணைப்பு படை முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில், பிரதேசத்தில் அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர்
தெரிவித்தார்.

1907378_722153991164094_1215193016691363631_n

10362943_722154001164093_759205564441291076_n

10369209_746188592109205_1982542164883443453_n

10464153_722153997830760_2628683960276411720_n

10487469_722154014497425_6720382795030063185_n

10490218_10152510359089467_515244392_n

10491129_619090554852965_7591168388496133685_n

10491182_746188452109219_2585876582755647207_n

10492133_722154011164092_7572060725394607229_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *