பாத்திமா ஹகீனா விவாகரம்.. திவயின பத்திரிகையின் இந்த துவேஷ கட்டுரைக்கு எதிராக முறையிடுங்கள்

கல்வி அமைச்சு அனுமதியளித்துள்ள பஞ்சாபி வகையான சீருடையை அணிந்து சென்ற ராஜகிரிய ஜனாதிபதி வித்தியாலய முஸ்லிம் மாணவி ஒருவருக்கும் நடந்து கொண்டிருக்கும் இனவாத சம்பவங்களின் தொடரை மிகவும் மோசமான முறையில், சிங்கள மக்களை ஆத்திரமூட்டும் வகையில் எழுதப்பட்ட 07/04/2014 ஆம் திகதிய “திவயின” பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது.

திவயின பத்திரிகையில் இவ்வாறான துவேஷ ஆசிரியர் தலையங்கங்கள், கட்டுரைகள் பிரசுரமாவது இது தான் முதன் முறையல்ல. மாற்றமாக திவயின அனமைக்காலமாக முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் ஆக்கங்களை பிரசுரிப்பதை அதிகரித்துள்ளது.

இது தொடர்பான எமது அதிருப்தியை உரிய முறையில் தெரிவிப்பது எமது கடமையாகும். கீழ்வருவோருடன் தொடர்பு கொண்டு மிகவும் கண்ணியமான முறையில் எமது எதிர்ப்பைத் தெரிவுப்போம்.

பிரதம ஆசிரியர்: நாரத நிஷ்ஷங்க/ மெரில் பெரேரா
மேற்படி கட்டுரையை எழுதியவர்: மனோஜ் அபயதீர
தொடர்புகளுக்கு:
ஆசிரிய பீடம்:
தொலைபேசி: (011) 2 497 500/ 2344253
பெக்ஸ்:2344352<
ஈமெயில்: divaina@unl.upali.lk

அந்த கட்டுரையில் தமிழாக்கம்.

சட்டையால் நெருப்பு வைத்தலும் சட்டைக்கு நெருப்பு வைத்தலும்

ஒழுக்கம் ஆரம்பிப்பது உடையிலாகும். ஒருவர் பாதையில் செல்லும்போது பாதை ஒழுங்குகளை எவ்வளவு பேணி நடந்தாலும், ஒரு பக்தனை விடவும் மெதுவாகவும், அதைவிட சிறந்த முறையில் நிலம் பார்த்து நடந்து சென்றாலும் அவன் அல்லது அவள் செல்வது நிர்வாணமாக என்றால் அதனால் ஏற்படும் குளறுபடிகள் ஏராளம். நாம் வாழ்வது நிர்வாணமான சமூகம் ஒன்று எனில் நாம் உடை அணிந்தால் ஒழுக்கம் சீர்குலையும். ஆனால் நாம் வாழ்வது ஆடையணியும் சமூகம் ஒன்றில் என்பதால் நிர்வாணமாகத் திரிவது ஒழுக்கத்தை சீர்குலைக்கும். ஒழுங்குகள் சீர்குலைவது அவற்றால் மாத்திரம் தானா? இல்லை. ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆடையொன்றை விட்டு விட்டு அணியும் வேறோர் ஆடையாலும் ஒழுக்கம் சீர்குலையும். அனைவரும் சிறுவர் சேலையை அணியும் ஓர் இடத்திற்கு ஒரு பெண் மாத்திரம் மேற்சட்டையையும் நீண்ட காற்சட்டையையும் அணிந்து வந்தால் அங்கு ஒழுங்கு பாதிக்கப்படும். இச் சிறு குறிப்புகளை வாசகர்களுக்கு ஞாபகமூட்டி விட்டு, ஒரு ஆடையால் இந்நாடு தீப்பற்றி எறிய வழிவகுத்த தீர்க்கமான சந்தர்ப்பபம் ஒன்றைப் பற்றி நினவூட்டியவாறு இன்றைய ஆசிரியர் தலையங்கத்தை ஆரம்பிக்கிறோம்.

நாவல ஜனாதிபதி பெண்கள் கல்லூரியில் இந்நாட்களில் ஒரு பிரச்சின நிலவுகிறது. மூவாயிரம் மாணவிகள் கற்கும் இப்பாடசாலையில் 30 முஸ்லிம் மாணவிகள் கற்கின்றனர். இது 0.01 சதவீதமாகும். அத்துடன் 08 தமிழ் மாணவிகளும், 20 கத்தோலிக்க மாணவிகளும் இங்கு கற்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் பொதுவான Dress Code எனும் ஆடை ஒழுங்கு ஒன்று உள்ளது. அது சதுரவடிவிலான கழுத்து வைக்கப்பட்ட, முழங்காலுக்குக் கீழ் வரையிலான ஒரு வெண்ணிற சட்டையாகும்.

அண்மையில் ஒரு நாள் இப்பாடசாலையின் முஸ்லிம் மாணவி ஒருவர் வெண்ணிற நீண்ட காற்சட்டை ஒன்றையும், அதன் மேல் பாடசாலை சட்டையையும் அணிந்து கழுத்துக்கு நீண்ட துணி ஒன்றான துப்பட்டா (ஷோல்) ஒன்றையும் இட்டு பாடசாலைக்கு சமூகமளித்தார். (இதற்கு பஞ்சாப் உடை என்று கூறலாம்.) அது பாடசாலையின் Dress Code எனப்படும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆடை ஒழுங்கிற்கு முற்றிலும் மாற்றமானதாகும்.

இதனால் அதிபரின் வேண்டுகோளின் பேரில், குறித்த மாணவியின் இணக்கத்துடன் மறைவான இடம் ஒன்றில் ஷோல் மற்றும் நீண்ட காற்சட்டை என்பவற்றை அம்மாணவியனாலேயே அகற்றப்பட்டன. இதனடிப்படையில் இவ்விடத்தில் இருந்து அம்மாணவி சதுர வடிவ கழுத்தைக் கொண்ட சட்டையை அணியும், பாடசாலையின் Dress Code ஐ மதிக்கும் மாணவியாக மீண்டும் மாறுகிறாள். அனால் அவள் வீட்டையடந்ததும் அவளின் தாய் சம்பவத்தால் கோபமுற்று அதிபருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்தாள். (இது தொடர்பான முழுமையான கட்டுரையொன்று ஞாயிறு (06 ஆம் திகதி) “திவயின” வில் பிரசுரமாகியுள்ளது.)

எவ்வித ஆழ அகலமும் தெரியாத அப்பாவி முஸ்லிம் சிறுமிக்கு பஞ்சாப் உடையொன்றை அணிவித்து அவளை பாடசாலைக்கு அனுப்பிய அவளின் வீட்டார் மேற்கொண்ட நடவடிக்கை எவ்வித அவசியமும் அற்றதாகும். இதனை ஒப்பிடுவதாயின் மலக் குவியல் ஒன்றிற்கு அருகில் சென்று அது மலம்தான் என்பதை அறிந்துகொள்ள மலத்தை உண்பதைப் போன்றதாகும். இது மிகவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு நாசகார செயலாகும். சவூதி அரேபியாவில் பணியாற்றும் சிங்கள யுவதி ஒருத்தி முழங்காலுக்கு 6 அங்குலம் மேலால் பாவாடையொன்றையும் கைகளற்ற இறுக்கமான சட்டை ஒன்றையும் அணிந்து கொண்டு பாதையில் சென்றால் என்ன நடக்கும்? அந்நாட்டில் கற்கும் சிங்கள மாணவி ஒருத்தி பஞ்சாப் உடையல்லாத, வெண்ணிற சட்டை ஒன்றை அணிந்து கொண்டு பாடசாலைக்குச் சென்றால் அந்தப் பக்கத்திற்கே எடுக்காமல் விடுவது மட்டுமல்லாமல், பாடசாலைக்கு வரும் வழி நெடுகிலும் அவளுக்கு கல்லடிகள் வாங்க வேண்டி வரும் என்பதை மேற்படி முஸ்லிம் மாணவியின் தாயிற்கு தெரியாதா? தனது மகளைப் பாவித்து இனவாத, மதவாத தீயை மூட்ட அவள் முயற்சிப்பது ஏன்? இது யாரால், யாருக்கு கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்தின் உப ஒப்பந்தமாகும்? சட்டை ஒன்றின் மூலம் சமூகம் ஒன்றை தீ மூட்ட யாரேனும் முயற்சி செய்வாராயின் அது மிகவும் கீழ்த்தரமான, இழிவானதொரு முயற்சியாகும். நாம் சரியா பிழையா எனும் தீர்ப்பை வழங்கும் பொறுப்பு வாசகர்களாகிய உங்களிடமுள்ளது.

Sinhala Version of the Editorial.

Tamil Translation : Madawala News

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *