பிரிலியன்ட் S.C 300வது உதைபந்தாட்டப் போட்டியில் மாவனெல்ல யூனைடெட் விளையாட்டுக்கழகம்

கல்முனை பிரிலியன்ட் விளையாட்டுக்கழகத்தின் 300வது உதைபந்தாட்டப் போட்டி இம்மாதம் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

கல்முனை பிராந்திய உதைபந்தாட்ட வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ள கல்முனை பிரிலியன்ட் விளையாட்டுக்கழகம் 1991 ஆம் ஆண்டு ஆரம்பித்த உதைபந்தாட்ட பயணம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 300வது போட்டியாக தடம் பதிக்கவுள்ளது.

இலங்கை உதைபந்தாட்ட சங்கம் 2010 ஆம் ஆண்டு கொழும்பு ஸீ.ஆர்.எப்.சி.விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற டிவிசன் 2 பிரிமியர் லீக் உதைந்தாட்ட சுற்றுப் போட்டியில் வட கிழக்கு மாகாண வரலாற்றில் முதற்தடவையாக கல்முனையைச் சேர்ந்த ஒரு விளையாட்டுக்கழகம் சம்பியன் பட்டத்தைப் பெற்றது வரலாற்று சான்றாகும்.

22 வருடகால உதைபந்தாட்ட வரலாற்றில் கல்முனை பிரிலியன்ட் விளையாட்டுக்கழகம் 299 போட்டிகளில் கலந்து கொண்டு 161 போட்டிகளில் வெற்றியும் ,46 போட்டிகளில் வெற்றி தோல்வியின்றியும் 92 போட்டிகளில் தோல்வியனையும் சந்தித்துள்ளதுடன் 685 கோல்களை சார்பாக புகுத்தியுள்ளதுடன் தமது கழகத்திற்கு எதிராக 425 கோல்களும் எதிர் கழகங்களால் போடப்பட்டுள்ளதாகவும் இதுவரை 91 வீரர்கள் தமது கழகத்தின் வெற்றிக்கு பங்களித்துள்ளதாகவும் கழகத்தின் செயலாளர் எஸ் ரீ. .எம்.பஸ்வாக் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள 300வது போட்டியில் மாவனெல்ல யுனைடெட் விளையாட்டுக்கழகம் மோதவுள்ளதுடன் இந்நிகழ்விற்கு உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா பிரதம அதிதியாகவும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

Mawanella United Sports Club

Mawanella United Sports Club

Kalmunai Brilliant

Kalmunai Brilliant

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares