பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்க்க பணம் கேற்கின்றார்களா ?

தமது பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்ப்பதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ள நிதி தவிர்ந்து வேறெந்த கொடுப்பனவுகளையும் வழங்க வேண்டாம் என, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.c40cd2c24ec2908a36d325e671e2

புதிய வருடத்திற்கு முதலாம் தரத்தில் மாணவர்களை இணைத்துக் கொள்ள சில அதிபர்கள் இலஞ்சம் கோருவதாக அண்மைக் காலங்களில் தகவல்கள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும் சில பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்க்க இலஞ்சம் வழங்க முற்பட்டதாகவும் சில சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் பெற்றோர் இலஞ்சம் குறித்த முறைப்பாடுகளை ஆணைக்குழுவிற்கு வழங்க தயக்கம் காட்டுவதாகவும் தெரியவந்துள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும் அரசாங்கம் அனுமதித்த தொகையை விட வேறெந்த கொடுப்பனவுகளையும் பாடசாலைக்கோ அதிபர்களுக்கோ வழங்க வேண்டாம் என இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும் எவரேனும் மாணவர்களை பாடசாலையில் இணைக்க இலஞ்சம் கோரினாலோ அல்லது யாரேனும் பெற்றோர் இலஞ்சம் வழங்க முற்பட்டாலோ உடன் அறிவிக்குமாறும், ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *