புதிய தேர்தல் திருத்தம் தொடர்பான விசேட விழிப்புணர்வு கருத்தரங்கு

 

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொகுதிவாரி முறையில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கான புதிய எல்லை நிர்ணயம் மற்றும் புதிய தொகுதிகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

இந்த புதிய தேர்தல் திருத்தம் தொடர்பான விசேட விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி இரவூ இஷாத் தொழுகையைத் தொடர்ந்து ஹிங்குளோயா மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

இந்த கருத்தரங்கில் வளவாளர்களாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹம்மட் மற்றும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த கருத்தரங்கில் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவனல்லை நியூஸ் நிர்வாகம் அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares