பொதுபலசேனாவிற்கு பாரிய பிரச்சாரத்தை கொடுக்கும் சுவர்வாஹினி

வில் பத்து வணவள பிரதேசத்தில் அத்துமீறி குடியேறியுள்ளவர்களுக்கும் அங்கு 18 குடிசைகளையும் 24 மணித்தியாலயத்துக்குள் அகற்றுமாறும் ஏப்ரல் 07ஆம் திகதி மண்னார் நீதி மன்றத்தில் வழக்குத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வணவள திணைக்களத்தின் பணிப்பாளர் ரத்ணாயக்க சுவர்ணவாகிணியில் தோண்றி தெரிவித்துள்ளார்.

பொதுபலசேனாவின் ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் பின்னாலிருந்து பாரிய பிரச்சாரத்தை கொடுக்கும் நிறுவனம்தான் சுவர்வாஹினி ஊடகம். இந்த ஊடகம் இந்த செய்தியை நேற்று(11) இரவு 8மணிக்கு ஒளிபரப்பியது. அதில் தோண்றிய பணிப்பாளரே மேற்கண்ட செய்தியைத் தெரிவித்தார்.

அந்தச் செய்திக் காட்சியில் சவுதி அரேபியயர்கள் – அமைச்சர் றிசாத்பதியுத்தீனிடம் ஒரு ஒப்பந்தம் செய்யும் காட்சியை காண்பித்து அரபு நாடுகளில் இருந்து நிதிபெற்று வில்பத்து காட்டில் அரபு கொலணிக்கு அமைச்சர் றிசாத்பதியுத்தீன் நிதிபெருவதாகவும், அதன் பின்னர் காடுகளை காண்பித்து முஸ்லீம்களது குடிசைகளைக் காண்பித்து வேறு ஒரு காட்டில் நடுவில் தீ பற்றிகொண்டிருப்பதை இந்தக் காட்டில் இந்த முஸ்லீமகள் செய்வதகவும் காட்சிகளைக் காண்பித்தது.

அதன் பின்னர் பொதுபலசேன வில்பத்தை பார்வையிடுவதாகவும், அங்கு உள்ள குடிமகண் ஒருவரிடம் ஞானத்தேரர் உரத்த குரலில் இது வடக்கின் அபே பூமியெனவும் சிங்களவர்களும் புலிகளால் விரட்டப்பட்டார்கள் போன்ற காட்சியை காண்பித்து பேசுவதையும் அதன் பின்னர் சுவர்வாஹினிக் வனவள பணிப்பாளர் மேற்சொன்ன தகவல்களைத் வெளியிடுகின்றார்.

-அஸ்ரப் ஏ சமத்-

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *