பொதுபல சேனாவின் மாநாட்டிற்கு மியன்மார் விராது தேரருக்கும் அழைப்பு

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுபல சேனாவின் மகா சங்க மாநாட்டிற்கு சர்ச்சைக்குரிய மியன்மார் நாட்டின் 969 அமைப்பின் சர்சைக்குரிய தலைவர் அஷின் விராது தேரர் அழைக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து செய்திகள் தெரிவிகின்றன.

மியன்மாரின் முஸ்லிம்களுக்கு எதிரான அமைப்பின் தலைவரான விராது தேரர் தலைமையில் நுற்றுக்கணக்கான பர்மா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளமையும், சர்வதேச டைம் சஞ்சிகை இவர் பற்றி அட்டைப் படக் கட்டுரை எழுதியபோது இவர் ஒரு பர்மாவின் பௌத்த தீவிரவாதி என விமர்சனம் செய்திருந்தமையும் குறுப்பிடத்தக்கது.

images

எழு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெளத்த தேரர்களை ஓர் இடத்துக்கு அழைத்து, எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருக்கும் மேற்படி மாநாட்டில் எதிர்பாராத இன்னும் சில முக்கிய வெளிநாட்டுப மற்றும் உள்நாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளதாக பொதுபல சேனா அறிவித்துள்ளது.

Gnanasara and Wirathu

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *