பொதுபல சேனாவின் வேகாத பருப்பு (நேற்றைய BBS கூட்டத்தின் முழு விபரம் -photos)

நேற்று சனிகிழமை (22/03/2014) பி.ப. 2.30 மணியளவில் பெளத்த கடும் போக்கு அமைப்பான பொதுபல சேனா அமைப்பைச் சேர்ந்த சுமார் 10 பிக்குகளும் 80த் தாண்டாத எண்ணிக்கையுடைய சில பெரும்பான்பை இனத்தை சேர்ந்த சில சகோதரர்களும் வருகை தந்தனர்.

இவர்களின் வருகைக்காக பிரதேச பொதுமக்களை திரட்டும் நோக்குடன் ஒரு கிழமைக்கு முன்பாகவே  அல்பிடிய அக்மீமன புன்யசார தேரரின் தலைமையில்,  துண்டுப்பிரசுரம் மாவனல்லைப் பிரதேசத்திலுள்ள பெரும்பான்மை மக்களின் கடைகள், வீடுகளுக்கு மாத்திரம் பகிர்ந்தளிக்கப்பட்டு குறித்த தினமான நேற்று   (22) பிற்பகல் 02.00 மணிக்கு வெள்ளை நிற உடை அணிந்து ஒன்று சேருமாறு வேண்டப்பட்டிருந்தனர். அத்தோடு நேற்றைய தினம் மாவனல்லை நகரமெங்கும் பாதுகாப்பு கடமையில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடி படையினர் குவிக்கபடுள்ளனர்.

இதற்காக பெருந்தொகையான பொலிஸ் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டிருந்ததோடு விசேட அதிரடிப்படையினரதும் இராணுவத்தினரதும் உதவி தேவைப்படும் பட்சத்தில் பெற்றுக்கொள்வதற்காக மாவனல்லை நகரிற்கு வெளியில் விசேட வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இதற்கு முன்னர் மாவனல்லை பொது மைதானத்தில் கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தாலும் நேற்றுமுன்தினம் (21) திடிரென இடத்தை மாற்றி மாவனல்லை நகர மத்தியில் கூட்டத்தை நடத்த ஏற்பாடு  செய்தனர்.

இந்நிலையில் சுமார் பி.ப. 2.30 மணியளவில் மாவனல்லை நகரை வந்தடைந்த பொதுபல சேனா அமைப்பினரை வரவேற்பதற்காக  பட்டாசுகள் கொளுத்தப்பட்டன. மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் மேடை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரிடம் துவேச எண்ணம் கொண்ட இனவாதிகளினால் மணு ஒன்று வழங்கப்பட்டது.

 

இக்கூட்டதில் ஞானசார தேரரினாள் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்:

மாவனல்லையில் உள்ள சில முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்தார். மேலும் மாவனல்லையில் முஸ்லிம்களோடு மிக சினேகபூர்வமாக இருக்கின்ற அமைச்சர்களுக்கும் தகாத வார்த்தைகள் பேசினார். மேலும்  மாவனல்லையில் அதிகமான பாதைகளின் பெயர்கள் முஸ்லிம்களின் பெயர்களிளே உள்ளதாகவும் முஸ்லிம் பாடசாலைகள் விடுகின்ற நேரத்தில் சில பாதைகளை மூடுவதாகவும்  தெரிவித்தார்.

அத்துடன் தெவனகல தொடர்பாக கருத்து தெரிவிட்கையில் நாம்  தெவனகலவை மறக்கவில்லை இது எமக்கு சிறிய விடையம் அதை நாங்கள் தீர்த்து தருவோம் என்று குறுப்பிட்டதோடு எமது இலக்கு முஸ்லிம்களின் நிகாப் விவகாரம் என்று கூறினார். இந்நாட்டில் முஸ்லிம்களும் பெரும்பான்மை இனத்தவர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனவும் உரையாற்றினார் என்பது கேலிக்கையாக இருந்தது.

பொது பல சேனா-இலங்கை பல்லினங்களுக்குச் சொந்தமான நாடல்ல. சிங்கள பௌத்தர்களுக்குச் சொந்தமான அம்மக்களின் ஆட்சியதிகாரத்திற்கு உட்பட்ட நாடாகும். எனவே, இங்கு வாழும் அனைவரும் இலங்கை சிங்கள பௌத்த நாடு என ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனை வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு, வெளிப்படுத்தாதவர்களுக்கு இங்கு இடமில்லை. அவர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். எதிர்காலத்தில் இதற்கான எமது போராட்டம் ஆரம்பமாகும் எனவும் பகிரங்கமாக அறிவித்து செயல்பட்டு வருகிறது.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கியுள்ள அறிக்கையில் இலங்கையில் மத சுதந்திரம் மறுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இது அடிப்படையற்ற காட்டிகொடுக்கும் செயலாகும் என்று பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளதுடன் .

முஸ்லிம் தரப்பினரால் இந்த நாட்டில் எங்காவது ஒரு பொலிஸ் நிலையத்தில், பொதுபல சேனாவுக்கு எதிராக ஒரு முறைப்பாடாவது செய்யப்பட்டிருந்தால், அதனை எமக்குத் தெரியப்படுத்துங்கள் என நாம் இந்நாட்டின் பாதுகாப்புத் துறையினரிடம் பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றோம் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்  சவாலும் விட்டிருந்தார் .

இறுதியாக நாங்கள் மாவனல்லையில் இருந்து போகும் பொழுது ஹஸன் மாவத்தையின் பெயரை அனாகரிக தர்மபால மாவத்தையென மாற்றிவிட்டுதான் போவோம் என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர். பின்னர் கூட்டம் முடிந்து அங்கிருந்த சில துவேச இனவாதிகள் சும்மார் 50 பேருடன் ஹஸன் மாவத்தைக்கு வந்து பொலிசார் முன்னிலையில் அப்பொழுது சும்மார் 40 இற்கும் மேற்பட்ட பொலிசாரின் முன்னிலையில் ஹஸன் மாவத்தை எனக் குறிப்பிடப்பட்டிருந்த பெயர்ப் பலகையை அனாகரிக தர்மபால மாவத்தையென பலாத்காரமான முறையில் சட்டவிரோதமாக பொதுபல சேனா அமைப்பு மாற்றினர். அதன் பின்னர் வந்திருந்த இனவாதிகள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

நேற்றையை தினம் நடைபெற்ற  பொதுபல சேனா அமைப்பின் கூட்டத்தில் தெரிவிட்கப்பட கருத்துக்களும் ஹஸன் மாவத்தையின் பெயரை மாற்றும் போது எடுக்கப்பட முழு விடியோவும் (video) எம்மிடம் உள்ளது இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் அந்த விடியோவை வெளியிடுவோம்…

997092_1571654163064929_5355902499988195801_n 1962878_1571654729731539_181820197923400978_n 10302222_1571654929731519_310965176303510608_n 10354943_1571655899731422_4920389435542886995_n 10385413_1571655826398096_8405008043410476024_n 10690179_1571654866398192_5971608193071469571_n download (11)

1980110_433982710078851_505257768_o

1511332_434279653382490_1395450883_n

1536498_434279570049165_1490755209_n

1980110_433982700078852_1112366314_o

1958272_434279610049161_983301797_n

1980110_433982706745518_207411317_o

10151785_434279590049163_459992405_n

1795232_472983969496523_1069492274_o

bodu bala sena mavanella-බොදු බල සේනා මාවනැල්ල බොදු සමළුව (21)

You may also like...

6 Responses

 1. kiyas says:

  what’s ur target??. u want destroy muslim? or u want develop buddishm? just think Bodu Bala

 2. Paragahadeniya salafy says:

  Enna whatha paruppu athu thane hasan mawatha ya darmapala mawatha indu matri weha wechchi kaattikiraan…..
  Muslim galidam Allah win meethulla payam edukkap pattu BBS in payam than ippothu ullathu……..

 3. richi says:

  Fuck u swarnawaahini Chanel .All Muslims has 2 Boycott this Chanel

  • Jamaldeen Rafeek says:

   Muslim brothers should avoid filthy language in commenting or replying, your words and actions will help to reflect the muslim community with a wrong image.

 4. Jamaldeen Rafeek says:

  Mind your language brothers, We are the ambassadors of Our prophet’s good characters who was sent by the Lord to complete the good manners and etiquette’s Be a muslim always don’t worry about these BBS. Our duty is just follow the teaching of the prophet which will help us to to be triumphant over our enemies.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *