பொதுபல சேனா – மியன்மார் 969க்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (படங்கள்)

பொதுபலசேனா அமைப்பிற்கும் மியன்மாரின் 969 அமைப்பிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று கைச்சாத்திடப்பட்டது.

கிருலப்பனையிலுள்ள பொதுபலசேனா அமைப்பின் தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று நண்பகல் இடம்பெற்றது.

இதன்போதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. உலகளாவிய ரீதியில் பௌத்த மதத்தினை பாதுகாப்பதற்காக பொதுபலசேனா அமைப்பும் மியன்மாரின் 969 அமைப்பும் இணைந்து செயற்படும் என அசின் விராது தேரர் அறிவித்தார்.

சுகததாஸ உள்ளகரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பொதுபலசேனா அமைப்பின் தேசிய மாநாட்டிலேயே மியன்மாரின் அசின் விராது தேரர் இந்த அறிவிப்பினை மேற்கொண்டார்.

இதனையடுத்தே பொதுபலசேனா அமைப்பிற்கும் மியன்மாரின் 969 அமைப்பிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரும் மியன்மாரின் 969 அமைப்பின் ஸ்தாபகரும் தலைவருமான அசின் விராது தேரர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

1

2

3

4

5

You may also like...

1 Response

  1. Peacelanka says:

    துவேசம் பிடித்த நாய்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *