பொருமை காத்து வரும் முஸ்லீம்களுக்கு நன்றி – ஜே.வி.பி தலைவர் அனுர குமார திசாநாயக்க (video)

அன்மைக்காலமாக முஸ்லீம்களது உணவு,உடை,அவர்களது வாழ்விடம் வியாபாரம், மத ஸ்தாபணங்களினை தாக்குவதற்கு இந்த அரசின் அனுசரனையில் ஒரு பௌத்த இயக்கம் இயங்கி வருகின்றது.அவர்கள் சொல்லுகின்றனர் நாங்கள் சீருடையற்ற பொலிஸ்காரர்கள். ஆனால் இந்த பௌத்த இயக்கம் அத்தனைக்கும் முஸ்லீம்கள் மிகவும் பொருமை காத்து வருகின்றார்கள்.

அதற்காக முஸ்லீம்களிடம் நான் ஜே.வி.பி கட்சியின் தலைவன் என்ற ரீதியில் நன்றி தெரிவிக்கின்றேன். ஏன ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நேற்று கொழும்பு 10 ல் உள்ள தபால் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்ணனியின் ஸ்தபாகர் தினத்தில் பிரதான உரையை நிகழ்த்துவதற்காக ஜே.வி.பி தலைவர் அனுர குமார திசாநாயக்க அழைக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் ‘தேசிய ஜக்கியத்தினை கட்டியெழுப்புவதற்கு எதிர் நோக்கும் சவால்’ என்ற தலைப்பில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந் நிகழ்வு முஸ்லீம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் சட்டத்தரணி ரசீத் எம். இம்தியாஸ் தலைமையில் நடைபெற்றது. கௌரவ அதிதியாக ஈராக் நாட்டின் தூதுவர் கத்த்hன் தாகா கலந்து சிறப்பித்தார்கள். அமைச்சர் ரவுப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர், முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய அனுகுமார திசாநாயக்கா மேலும் தெரிவித்தாவது –

நான் இந்த கூட்டத்திற்கு வரும்போது பத்தரமுல்லையில் இருந்து புறப்பட்டு வந்தேன். பத்தரமுல்லையை வெசாக் வலயம் அங்கு பிரகடணப்படுத்தப்பட்டிருந்தது. அந்தப் பிரதேசத்தில் பௌத்த மத கலாச்சாரம், அதே போன்று மருதாணை சாஹிரா வித்தியலயத்தை நான் தண்டி வரும்போது அங்கு தொழுகைக்கு அழைக்கும பாங்கு ஓதப்படுகின்றது. கொம்பணிவீதியில் வரும்போது அங்கு கிரிஸ்த்துவ தேவலாய தேவார நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

அதே போன்று சிலேவ் ஜலண்டிக் கருகில் வரும்போது அங்கு ஹிந்துக்கோவில் மணி ஒலித்தல் கேட்டது.
இதுதான் இந்த இலங்கை நாட்டின் சகல சமுகங்களும் ஜக்கியமாக தத்தமது மத அனுஸ்டானங்களை செய்வதற்கு ஏகுவாக இலங்கை திருநாடு இருக்க வேண்டும். எல்லோரும் ஒரு இனம்தான் இருக்க வேண்டும். அல்லது பௌத்த மத கலாச்சார கொடி மட்டுமே பறக்க வேண்டும் எனச் சொல்வது மடைமை.

முஸ்லீம் பெண்களது அபாயா பர்தா அணிந்தவர்கள் தமிழ் பெண்கள் பொட்டுவைத்து முக்கில் கொலிசு அணிந்தவர்களாகவும் அதே போன்ற கிரிஸ்த்துவ பொள்த்த கலை கலாச்சார ரீதியில் இந்த நாட்டில் பிறந்த மணிதன் தான் வாழும் உரிமை உண்டு அதனை யாராளும் தடுக்க முடியாது.

கடந்த காலத்தில் எமது பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த கேரத் கலாச்சார அலுவல்கள் அமைச்சராக இருந்த போது அந்நேரத்தில் தான் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கு பாடசாலை சீருடையில் முஸ்லீம்பெண்களுக்கு மேலதிக துணி ஒன்று அவர்களது கலை கலாச்சாரத்திற்கு ஏற்ப வழங்கவேண்டும் என்ற அரச மட்டத்தில் தீர்மாணத்தை வழங்கியவர்.

வில்பத்து வணபிரதேசத்தில் முஸ்லீம்களை குடியேற்றியதாகச் சொல்கின்றார்கள். ஆனால் இவர்கள் ஒருபோதும். அமேரிக்க கொம்பணி ஒன்றுக்கு அவ்விடத்தில் வாழை தோட்டச் செய்கை 2000 ஏக்கரை அரசு வழங்கியிருக்கின்றது.

அதே போன்று கந்தலாய் பெலவத்தை போன்ற இடங்களில் எல்லாம் 4000 ஏக்கரை வழங்கியிருப்பது பற்றி யாரும் இங்கு பேசப்படுவதில்லை. அரசியல் நோக்கங்களுக்காக வணவல திணைக்களத்தின் பணிப்பளர் வில்பத்து பகுதியில் முஸ்லீம்களை மீளக் குடியேற்றுத்தல் என்றே அவர் அனுமதி அளித்த கடிதத்திற்கு தலைப்பிட்டுள்ளார். அதிகாரிகளே ஒரு இனத்தின்பெயரைக் குறிப்பிட்டு அங்கு இனங்கடையே பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர். எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இராக் நாட்டின் இலங்கைக்கான துதுவர், நீதி அமைச்சர் ரவுப் ஹகீம் முன்னால் அம்மைசர் இமிதியாஸ் பாகீர் மாக்கர், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆசாத் சாலி, மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் முஸ்லிம் கொவுன்சில் தலைவர் என்.எம் அமீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-அஸ்ரப் ஏ சமத்-

video – Daily Ceylon

10325426_1382740088680511_6811946921687349504_n

10330503_1382740692013784_957685477770269841_n

10363585_1382740402013813_6015035104135787419_n

10365983_1382740592013794_4746122937595975648_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares