போதைக்கு அடிமையாகும் மாணவர் சமூகம்… இது மாவனல்லையில் (Video)

மாவனல்லையில் தற்­போது நமது மாண­வர்கள் மத்­தியில் பாபுல், பீடா, பன்­பராக், கேரளா கஞ்சா, மாவா போன்­ற­வற்றின் பாவ­னைகள் அதி­க­ரித்­து­விட்­ட­தாக அறிய முடி­கி­றது. சில மாண­வர்கள் பாடசாலை வகுப்­ப­றை­க­ளுக்­குள்­ளேயே இவற்றைப் பயன்­ப­டுத்­து­வ­தா­கவும் தெரியவரு­கி­றது.gty_marijuana_joints_ll_130904_16x9_992

இன்­றைய மாண­வர்­களே நாளைய தலை­வர்கள். துறைசார் வல்­லு­னர்­க­ளாக, நிபு­ணர்­க­ளாக, சமூ­கத்­தையும் பிர­தேசத்­தையும் நாட்­டையும் நல்­வ­ழிப்­ப­டுத்­து­ப­வர்­க­ளாக எதிர்­கா­லத்தில் மிளி­ர­வுள்ள தற்­கால மாண­வர்கள் நற்­பண்­பு­க­ளுடன் ஆரோக்­கி­ய­மாக வாழ்­வ­தற்கு வழி­காட்­டப்­ப­ட வேண்டும். இது பெற்­றோர்­க­ளி­னதும், ஆசி­ரியர்களினதும், சமூ­கத்­தி­னதும் தலை­யாய பொறுப்­பாகும்.

இப்­பொ­றுப்பு தவ­றும்­பட்­சத்தில், ஆரோக்­கி­ய­மற்ற, சமூக விரோத செயற்­பா­டு­களில் ஈடு­படக் கூடிய சமூ­க­மொன்­றையே நாம் எதிர்­கா­லத்தில் காண முடியும். அவ்­வா­றான நிலை உரு­வாக்­கப்­ப­டாமல் இருக்க வேண்­டு­மா­யின் இன்­றைய மாண­வர்கள் ஒழுக்க விழு­மி­யத்­து­டனும் பண்­பாட்டுக் கலா­சா­ரங்­க­ளு­டனும், ஆன்­மிக ஈடு­பாட்­டு­டனும் வாழக் கூடி­ய­வர்­க­ளாக வீட்டுச் சூழ­லிலும் பாட­சா­லை­க­ளிலும் பள்ளிவயல்களிலும் வழி­காட்­டப்­பட வேண்­டி­யது காலத்தின் தேவை­யாக மாறி­யுள்­ளது.

அறிவு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்­சியின் கார­ணங்­க­ளினால் எவை­யெல்லாம் நவீன கலா­சா­ர­மென்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றதோ, அவை­யெல்லாம் அநா­க­ரி­கமாக மாறி, நாளைய தலை­மு­றை­யி­னரை அழித்­துக் ­கொண்­டி­ருக்­கி­றது. நவீன கலா­சார மோகத்­திற்குள் தள்­ளப்­பட்­டுள்ள மாணவ சமூ­கமும் இளைஞர், யுவ­தி­களும் தங்­களைத் தாங்­க­ளா­கவே அழித்­துக் ­கொண்­டி­ருக்­கி­றார்கள்.

பேஸ்புக், வாட்சப் என்றும் சமூக வலை­த்­த­ளங்கள் என்றும் ஸ்மார்ட் தொலை­பேசிப் பாவனை என்றும் போதை­வஸ்துப் பயன்­பாடு என்றும் அவை­க­ளுக்குள் மூழ்கி கால நேரங்­க­ளையும் பணத்­தையும் வீண்­வி­ரயம் செய்கின்றனர்.

அழி­வி­னதும் ஆபத்­தி­னதும் விளை­வு­களை விளங்கிக் கொள்­ளாமல் அல்­லது விளங்­கியும் அவற்­றி­லி­ருந்து விடு­தலை அடைந்து கொள்ள முடி­யாமல் தத்­த­ளித்துக் கொண்­டி­ருக்­கி­ன்றனர். சமூகமய­மாக்­கலினால் ஏற்­படும் தவ­றுகள் இளைய தலை­மு­றை­யி­னரை இவ்­வா­றான படு­பா­தா­ளத்தில் தள்ளிக் கொண்­டி­ருக்­கி­றது.

அந்­த­வ­கை­யில் தற்­கா­லத்தில் பாட­சாலை மாண­வர்கள் ஒருவித போதைப்­பொருள் பாவ­னைக்கு தங்­களை அடி­மைப்­ப­டுத்தி வரு­வ­தாக அறிய முடி­­கி­றது.

மிகவும் வெளிப்­ப­டை­யா­கவும் மறை­மு­க­மா­கவும் வீதி­யோரக் கடை­க­ளிலும் பாட­சாலைச் சூழ­லிலும் விற்­கப்­படும் இத்­த­கைய பொருட்கள் 2006 ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட மது­சாரம் மற்றும் புகை­யிலைத் தடைச் சட்­டத்தின் கீழ் தடுக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் தடுக்­கப்­பட்­டுள்ள இப்­பொ­ருட்கள் தடை­யின்றி விற்­பனை செய்­யப்­ப­டு­வதைத் தடுப்­ப­தற்கு சட்டம் சரி­யாக அமுல்­ப­டுத்­தப்­ப­டாமல் இருப்­பது இந்­நாட்டின் எதிர்­கா­லத்தை கேள்­விக்­கு­றி­யாக்­கலாம்.

தங்­க­ளது பிள்­ளை­களின் செயற்­பா­டு­களில் பெற்­றோர்கள் அதிக கவனம் செலுத்­து­வ­தோடு பிள்­ளையின் சம­ய­ வ­யதுக் குழுக்கள் மற்றும் நண்­பர்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.

அத்­தோடு பாட­சா­லை­களில் மாண­வர்­களின் இத்­தயை போதை தரும் பொருட்­களின் பயன்­பாடு குறித்து பாட­சாலைச் சமூகம் அச­மந்தப் போக்கில் செயற்­படாமல் ஒவ்­வொரு ஆசி­ரி­யரும் தங்­க­ளது பிள்ளை போன்று அணைத்து மாண­வர்­க­ளையும் கவ­னத்­திற்­கொண்டு உரிய ஆலோ­சனை மற்றும் வழி­காட்­டல்­களை வழங்க வேண்டும்.

பாட­சா­லை­களில் உள்ள வழி­காட்டல் ஆலோ­சனைச் செயற்­பா­டா­னது வினைத்­திறன்மிக்­க­தாக காணப்­ப­டு­வ­தில்லை என்ற குற்­றச்­சாட்டும் காணப்­ப­டு­கி­றது. இதைத் தவிர்த்து தொழில்­வாண்மை உள­வளத் துணை­யா­ளர்­களின் உதவி கொண்டு இந்த வழி­காட்டல் ஆலோ­சனைச் செற்­பா­டுகள் தொடர்ச்­சி­யாக வினைத்திறனுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவை தவிர, பள்ளிவாசல்களில், ஜும்மா பிரசங்களிலும் போதைவஸ்த்துப் பாவனை மற்றும் விற்பனை தொடர்பில் பெற்றோர்களையும் மாணவர்களையும் நல்வழிப்படுத்தும் வகையில் ஆன்மிக ரீதியாக விழிப்புணர்வூட்ட ப்படுவதும் அவசியமாகும்.

அத்துடன், சட்டத்தை அமுல்படுத்துகின்ற பொலிசாரும் அதிகாரிகளும் தயவுதாட்சனையின்றி, சட்டத்தை மீறி இத்தகைய போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை முறையாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஒரு மாணவனின் சமூக மயமாக்கலில் தாக்கம் செலுத்துகின்ற ஊடகம் உட்பட சமூகமாயமாக்கல் முகவர்கள் தமது பொறுப்பை முறையாக செயற்படுத்தும் போதுதான் மாணவ சமூகத்தை இது போன்ற உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் போதைப் பொருட்களின் பாவனையிலிருந்து பாதுகாப்பதோடு நாளைய சமூகத்தின் நற்பிரஜைகளாகவும் மாற்ற முடியும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *