மகவத்தை மஸ்ஜிதுல் ஜன்னா ஜும்ஆ பள்ளிவாயலின் புதிய நிர்வாக தெரிவுக்கான மகாசபை கூட்டம் இன்று நடைபெற்றது.

மகவத்தை மஸ்ஜிதுல் ஜன்னா ஜும்ஆ பள்ளிவாயலின் புதிய நிர்வாக சபையை தெரிவுக்கான மகாசபை கூட்டம் இன்று ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து பள்ளிவாயலில் நடைபெற்றது. முதல் நிகழ்வாக நிர்வாக சபையின் தலைவர் Nawas ஆசிரியர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினர். இதை அடுத்து ஹிங்குல் ஓயா மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆ பள்ளிவாயலின் தலைவர் Dr. Hameed A Azeez அவர்கள் தலைமை உரையாற்றினார்.

அதனை தொடர்ந்து கடந்த கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டதோடு 2011- 2103 காலப்பகுதிக்கான நிதியறிக்கை சமர்பிக்கக்ப்பட்டது. இதனையடுத்து நிர்வாக சபை கலைக்கப்பட்டதோடு புதிய நிர்வாக சபையை தெரிவு செய்வதற்காக 5 பேர் கொண்ட ஒரு மஷூரா குழு தெரிவு செய்யப்பட்டது.

இதனை மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆ பள்ளிவாயலின் செயலாளர் ஆசிரியர் Zamni அவர்கள் நடத்தினார். இதன் படி இக்குழுவிற்கு Mr. Irfan, Mr. Zakariyya Faleel, Mr.Abul Hasan, Mr.Marzook, Mr. Mikshaad ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.இம்மஷூரா குழுவே 6 வாரங்களுக்குள் புதிய நிர்வாக சபையை தெரிவு செய்யும்.

இன்று நடந்த இம்மகா சபை கூட்டத்தில் ஊர் ஜமாத்தினர் சுமார் 100 பேர் அளவில் மாத்திரமே கலந்து கொண்டனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares