மத விவகாரங்களை ஆராய விசேட பொலிஸ் குழு – ஜனாதிபதி

இலங்கையில் மதங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்ய விசேட பொலிஸ் குழு அமைக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மத விவகாரங்கள் அமைச்சின் கீழ் இந்த பொலிஸ் குழு செயற்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் பொலிஸ் அலகுகள் போன்று குறித்த பொலிஸ் பிரிவு செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் எந்தவொரு நபருக்கும் அல்லது நிறுவனத்திற்கும் சட்டத்தை கையிலெடுக்க அனுமதி அளிக்கப்படாது என ஜனாதிபதி கூறியுள்ளார். அலரி மாளிகையில் இன்று (24) ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை சந்தித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Mahinda-Rajapaksa3-e1360033217411

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *