மரணப் படுக்கையில் இருக்கும் தம்புள்ளப் பள்ளிவாயல்

இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும்.!

தம்புள்ள ஜும்ஆப் பள்ளிவாயல் பிரச்சினைத் தொடர்பாக நம் சமூகத்தைச் சார்ந்த குறிப்பிட்ட சில அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்றுத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட சிலர் அண்மையில்; தம்புள்ள விஹாராதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த நிலையில் மேற்படி குழுவினர்களுக்கு யார் அந்தப் பொறுப்பைக் கொடுத்தது அவர்கள் எவ்வாறு முழு முஸ்லிம்களதும் பிரதிநிதிகளாக ஆனார்கள் என்ற கேள்விகள் எழுகின்றன. இது ஒரு புறமிருக்க அவர்கள் விஹாராதிபதியுடன் கலந்துரையாட என்ன தேவை ஏற்ப்பட்டது நாம் ஏன் அவருடன் கலந்துரையாட வேண்டும் போன்ற இன்னும் பலக் கேள்விகளும்; எழுகின்றன.

அத்துடன் குறித்தப் பேச்சுவார்த்தையின் போது முஸ்லிம்களின் பிரதிநிதிகள்; என்று தமமை அடையாளப்படுத்திக் கொண்டு சென்றிருந்தவர்கள் பள்ளிவாயலை விட்டுக் கொடுக்க இணக்கப் பாட்டுக்கு வந்திருப்பதாகவும் அந்தத் தகவல் செய்தி வெளியிட்டிருந்தது அவ்வாறு அவர்கள் இணக்கம் தெரிவிக்க அவர்களுக்க யார் அந்த அதிகாரத்தைக் கொடுத்தது போன்ற இன்னும் பல கேள்விகள் எழுந்து கொண்டே இரக்கின்றன.

இவை அனைத்தையும் ஒரு புறம் வைத்த விட்டு பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது என்பதை பற்றி நோக்குவோம்.

குறித்த பேச்சுவார்த்தையின் போது தங்களை முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்று இனங்காட்டிக் கொண்டவர்கள் பள்ளியை அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்க்கு பூரண சம்மதம் தெரிவித்திருந்ததுடன் தற்பொழுது பள்ளிவாயில் அமையப் பெற்றிருக்கும் இடத்திற்க்கு அண்மையில் ஒரு காணி இருப்பதாகவும் அதனை மாற்றுக் காணியாக வழங்குமாறும் வேண்டுகோல் ஒன்றினையும் முன் வைத்துள்ளனர்.

இவர்களின் இந்த விட்டுக் கொடுப்பும் வேண்டுகோலும் மரணப்படுக்கையில் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவன் மீது இரக்கப்பட்டுக் அவனைக் கருனைக் கொலைச் செய்வது போன்ற ஒரு செயலாகும் இவ்வாறு இந்தப் பள்ளியை விட்டுக் கொடுத்தால் அதனால் ஏற்படப் போகும் பின்விளைவுகள் பற்றி நாம் ஏற்கனவே உடகங்கள் வாயிலாகத் தெளிவுபடுத்தி இருந்தோம்.

மேற்படி குழுவினரால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கு விஹாராதிபதி ‘நீங்கள் குறிப்பிடுவது போன்று அதற்க்கு அண்மையில் காணி வழங்குவதனால் குறித்த காணியால் இனநல்லுறவுப் பாதிக்காது என்று கருதுகின்றீர்களா இது இன்ஞி வழங்கி மிளகாய் வாங்கிய கதையாகத்தான் அமையும்’ என்று பதில் வழங்கியுள்ளார.

இத்தகய இவரின் பதிலில் இருந்து நிச்சயமாக இந்தப் பள்ளியை விட்டுக் கொடுத்தால் எதிர்காலத்தில் தம்புள்ளயில் மாத்திரமின்றி நாட்டின் பலப்பாகங்களிலும் பல பள்ளிகள் அகற்றப்படும் ஆபத்து இருப்பதுத் தெளிவாகத் தெரிகின்றது. அதுமட்டுமின்றி அப்பிரதேசங்களில் முஸ்லிம்களின் இருப்பே கேள்விக்குறியாகி வடும் என்பதில் சந்தேகமில்லை.

உண்மையில் தம்புள்ளையில் பள்ளிவாயல் ஒன்று இருக்கின்றது என்றச் செய்தி பெரும்பாண்மையான முஸ்லிம்களுக்கு இந்தப் பிரச்சினை ஏற்ப்பட்டதன் பிறகுதான் தெரிய வந்தது எனலாம் என்றாலும் இந்த பள்ளி அகற்றப்பட வேண்டும் என்று இன்று அடம்பிடிக்கும் விஹாராதிபதிக்கு ஆரம்பம் முதலே தெரியும் என்றாலும் இத்தனை காலமாக மௌனமாக இருந்து விட்டு தற்பொழுதுதான் அவருக்கு ஞானம் பிறந்திருக்கின்றது என்றால் இதில் ஏதொ ஒரு பின்புலம் இருக்க வேண்டும்.

தம்புள்ளை நகரம் அண்மையில் பொருளாதார மத்திய நிலையமாக கட்டமைக்கப்படுவதற்க்கு முன் மாலை 6.00 மணியானால் மனித சஞ்சாரம் அற்ற கள்வர்களும் காடையர்களும் வழிப்பறிக் கொள்ளையர்களும் அரசோச்சிய ஒரு இடமாகவே இருந்து வந்தது அப்போது அந்த நகரத்துக்கு ஒரு பெறுமதியோ அல்லது அவர்கள் கூறுகின்ற அந்த புனிதப் பூமிக்கு எந்தவொரு புனிதத்துவமோ இருக்கவில்லை ஆதலால் விஹாராதிபதி அந்தப் பள்ளிவாயலையும் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.

இன்று தம்புள்ளை நகரம் இலங்கையிலேயே பெயர் குறிப்பிடப்படக் கூடிய ஒரு முக்கிய பொருளாதாரக் கேந்திர நகரமாக மாறியதனால் வளர்ச்சியடைந்த எந்தவொரு நகரிலும் முஸ்லிம்களை இருக்க அனுமதிக்கக் கூடாது எனும் பௌத்த பாசிச கும்பல்களின் குறுகிய சிந்தனையின் பிரகாரம் முஸ்லிம்களை தம்புள்ள நகரிலிருந்து துடைத்தெறியும் திட்டத்தின் முதற்கட்டமே இந்த பள்ளிவாயல் விவகாரம்.

அத்துடன் குறித்த கலந்துரையாடலின் போது தேரர் குறிப்பிட்ட இன்னுமொரு முக்கிய விடயமும் இங்கே கவனிக்கப்படல் வேண்டும்.

அதாவது ‘தம்புள்ள விஹாரையின் காணி 1931 ல் 19ம் இலக்கத்தில் உள்ளடங்கும் விஹாரை மற்றும் மதஸ்தலங்கள் சட்டத்தின் கீழ் உள்ளது அவ்வாறே நீங்கள் விண்ணப்பிக்கும் மாற்றுக் காணியும் இந்தப் புனிதப் பூமி எல்லைக்குட்பட்டதே இவை எனது சொந்க்காணி கிடையாது ஆதலால் என்னால் நான் விரும்பியவாறு எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாது. ஆதற்கான் சட்டம் ஒன்றிருக்கின்றது அந்த சட்டத்தின் பிரகாரம் விகாரை மற்றும் புனித பூமிக்குட்பட்டப் பிரதேசத்தில் ஏனைய மதங்களின் மதஸ்தலங்கள் அமைக்க முடியாது’ என்று தேரர் கூறியுள்ளார்.

மேற்படித் தேரரின் கூற்றின்படி தம்புள்ள பள்ளிவாயல் சட்டவிரோதமாகவே அமைக்கப்பட்டுள்ளது எனவே சட்டத்தின் முன் அது ஒரு குற்றமாகும் என்றும் கூற வருகின்றார் சுமங்களர்.

அப்படி பள்ளிவாயல் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளது என்றால் சுமங்கலர் ஏன் நீதி மன்றத்தை நாடவில்லை. அவரின் இத்தகய செயல்களிலிருந்தே அவரின் வாதத்திறக்கு அவரிடம் எந்தவொரு வலுவான சான்றும் இல்லை என்பது புலனாகின்றது. ஆதலால்தான் அச்சுறுத்தலால் சாதிக்கப் பார்க்கின்றார். நீதி மன்றம் சென்றால் நிச்சயம் அது பள்ளிவாயலுக்குச் சாதகமாக அமைந்து விடும் என்பதுவும் அவருக்குத் தெரியும் ஆதலால்தான் முஸ்லிம்கள் நீதிமன்றம் சென்றுவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றார்.
எனவே மேற்படி தேரரின் கூற்றில் எவ்வித உண்மையும் கிடையாது புனிதப் பூமிப் பிரகடணத்தில் அவ்வாறு ஏனைய மதங்ஙளின் வணக்கஸ்தலங்கள் அமைப்பதைத் தடை செய்யக்கூடிய எந்தவொரு சட்டமும் கிடையாது என்பதே உண்மையாகும்.

அத்துடன் மேற்படிப் பிரச்சினை தொடர்பாக ஜனநாயக ரிதியிலான அத்தனை அனுகுமுறைகளையும் செய்து விட்டோம் ஜனாதிபதி வரைக்கும் சென்று விட்டோம் என்றாலும் எந்தப் பலனும் இதுவைரைக் காணப்படவில்லை மாறாக அனைத்தும் நாளுக்கு நாள் பாதமான சூழலையே அதிகப்படுத்திக் கொன்றிருக்கின்றதைப் பார்க்கின்றோம்.

இந்நிலையில் நாம் உடனடியாகக் காலத்தாமதமின்றி பின்வரும் செயற்திட்டங்களை மேற்கொள்ளுதல் பள்ளிவாயலைப் பாதுகாப்பதற்க்கு மிகச் சிறந்ததொரு வழியாக இருக்கும் எனக்கருதுகின்றேன்.

1. தம்புள்ள பள்ளிவாயல் பிரச்சினைத் தொடர்பாகச் செயல்படுவதற்குப் புத்தி ஜீவிகள் சட்ட வல்லுனர்கள் சமூக ஆர்வலர்கள் போன்றோர்களை உள்ளடக்கிய தனியானதொரு குழு உடனடியாக அமைக்கப்படுதல் வேண்டும்.

2. இந்தக் குழு எந்நிலையிலும் பள்ளி பறிபோய்விடாதிருக்கத் தூர நோக்குடன் மிகவும் கவனமாகவும் அவதானமாகவும் செயல்படல் வேண்டும்.

3. தம்புள்ளளை பள்ளி நிருவாகிகள் மற்றும் அங்கு நிரந்தரமாக அல்லது தொழிலின் நிமிர்த்தம் வசிப்பவர்கள் எக்காரணம் கொண்டும் பள்ளியை குறித்த இடத்திலிருந்து அகற்றுவதற்க்கு அனுமதிப்பதில்லை என்ற முடிவில் உறுதியாக இருத்தல் வேண்டும்.

4. அவ்வாறே இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களும் தம்புள்ளப் பள்ளிவாசலை குறித்த இடத்திலிருந்து அகற்றுவதற்கு எதிரானவர்கள் என்பதைப் பறைச்சாட்டக்கூடிய தங்களால் முடிந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன் அதற்க்குத் தங்களால் முடிந்த உதவிகளையும் செய்தல் வேண்டும்.

5. விஹாராதிபதியுடன் தனி நபர்கள் அல்லது குழுக்கள் போன்ற யாரும் எவ்விதப் பேச்சுவார்த்தையும் செய்வதை முற்று முழுதாகத் தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

6. பள்ளிவாயல் பிரச்சினைத் தொடர்பாகச் செயல்படுவதற்கு ஸ்தாபிக்கப்பட்டக் குழு தனது முதல் வேலையாக தேரரின் அத்துமிறலுக்கு எதிராக நீதி மன்றத்தில் ஒரு வழக்குத் தாக்கல் செய்தல் வேண்டும்.

7. இந்தப் பிரச்சினைக்கு அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக்கோரி நாட்டில் உள்ள அனைத்த முஸ்லிம்களும் ஒன்று பட்டு நாடுதழுவிய அடிப்படையில் அமைதி ஊர்வலம் அல்லது போராட்டம் ஒன்றை நடாத்துவதன் மூலம் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்;.

இவற்றுள் நான் முதலாவது குறிப்பிட்ட குழு அமைத்தல் மிக முக்கியமாகும் அப்போதுதான் கண்ட கண்ட அத்தனை பேரும் அவரவர் விரும்பியவாறு முடிவுகள் எடுப்பதிலிருந்துப் பாதுகாக்கலாம்.

– முனாப் நுபார்தீன் –

dambulla-mosque05

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares