மல்வனை அநாதை இல்லத்திற்கு பௌத்த தேரர்களின் வருகையினால் பற்றம்

மல்வானை பிரதேசத்தில் அமைந்துள்ள மாகொல அனாதை இல்லத்தின் கிளை அனாதை இல்லத்தில் மிருக தினமான இன்று மாடறுத்ததாக கூறி இன்று மாலை பிரதேச பிக்குமார் உற்பட சில பேரினவாத பிரதேசவாசிகள் குறித்த அனாதை இல்லத்தை முற்றுகை இட்டதில் பதட்டமான சூழ்நிலை ஒன்று உருவாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;

இன்றைய தினம் குர்பான் வழங்குவதற்காக மாடுகள் பலியிடப்பட்டுள்ளதாக தெரிவித்து பெருன்பான்மை இன பிரதேச வாசிகள் சிலர் உட்பட சுமார் 20 பிக்குமார் இன்று மாலை மல்வானை உலஹிடிவேல பிரதேசத்தில் அமைந்துள்ள மாக்கோலை முஸ்லிம் அநாதை நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

சட்டத்திற்கு புறம்பாக இன்றைய தினம் மாக்கோலை முஸ்லிம் அநாதை நிலையத்தில் மாடுகள் பலியிடப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதால், அநாதை நிலையத்தை பரிசோதனை செய்ய வேண்டும் என பிக்குகள் அநாதை நிலைய நிர்வாகத்தினரிடம் தெரிவித்துள்ளார். அப்படி எந்தவித சம்பவங்களும் இங்கு நடைபெறவில்லை என அநாதை நிலைய நிர்வாகம் தெரிவித்த போதும், பிக்குமார் குறித்த இடத்தை விட்டு வெளியேறாததால் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு வருகைதந்த பொலிஸ் அதிகாரிகள் அநாதை நிலையத்தை தாம் பரிசோதனைக்கு உட்படுத்துவதாகவும், சட்டத்துக்கு மாற்றமான சம்பவங்கள் நடைபெற்றிருந்ததால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்த பின்னர் பிக்குமார் உட்பட பிரதேச வாசிகள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடியும் வரை மாக்கோலை முஸ்லிம் அநாதை நிலைய வளாகத்தில் இருந்த சுமார் 70 ஆடுகளை பொலிஸார் எடுத்துச் சென்றுள்ளனர்.

தற்பொழுது குறித்த பிரதேசத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

12

11

10

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares