மாணவன் ரீஸா சாதனை

மாவனல்லையில் அமைந்துள்ள Good Hope முஸ்லிம் சர்வதேசப் பாடசாலையில் தரம் 11 இல் கல்வி பயிலும் முஹம்மந் ரீஸா ரிஸ்வி கரீம் என்ற மாணவன் அறிவியல் முன்னேற்றத்திற்கான இலங்கை சங்கம் Sri Lanka Association for the Advancement of Science (SLAAS) இனால் நடாத்தப்பபட்ட 2013ஆம் ஆண்டிற்கான இளம் கண்டுபிடிப்பாளரை தெரிவு செய்வதற்கான தேசிய மட்டத்திலான போட்டியில் பதக்கம் வென்று Mawanella Good Hope International College இற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் நடைபெற்ற மேற்படிப் போட்டியில் M. ரீஸா என்ற மாணவன் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சிறியவகையான நீர்மூழ்கிக்கப்பல் (Submarine) ஒன்றினை கண்டுபிடித்திருந்தார்.

இவை தவிர மேற்படி மாணவனின் கண்டுபிடிப்பானது இலங்கை கல்வி அமைச்சு மற்றும் இலங்கை கண்டுபிடிப்பாளர் ஆணைக்குழு Sri Lanka Inventors Commission (SLIC) ஆகியற்றினால் முறையே ஐ{ன் மாதம் 11ஆம் திகதி பாடசாலை மட்டங்களில் நடைபெற்ற மாவட்டப் போட்டியிலும் 21ஆம் திகதி ஏஹலியகொட தேசிய பாடசாலையிலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மாகாணப் போட்டிகளிலும் முன்னிலை பெற்று இவ்வருடம் நவம்பர் 30ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 01 ஆம் 02ஆம் திகதி வரையான நாட்களில் கொழும்பு மண்டபத்தில் நடைபெற உள்ள தேசிய மட்டத்திலான கண்காட்சி மற்றும் போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுள்ளார்.

தேசிய மட்ட பாடசாலை களுக்கு மத்தியில் நடைபெற்ற மேற்படி இளம் கண்டபிடிப்பாளர்களுக்கான போட்டியில் கலந்து கொண்ட ஒரே ஒரு சர்வதேசப் பாடசாலை மாவனல்லை குட்ஹோப் சர்வதேசப் பாடசாலை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *