மானவனல்லைப் பிரதேச முஸ்லிம்கள் தங்களுடைய வாக்குகளை ஜனாதிபதிக்கு வழங்க வேண்டும்

கேகாலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் பாரிய அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த அபிவிருத்திப் பணிகள் மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு மீண்டும் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற வேண்டும். இதற்கு மானவனல்லைப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மக்கள் தங்களுடைய வாக்குகளை மஹிந்த ராஜபக்ஷ வழங்கி அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்தார்.

மாவனல்லை பிரதேச சபை உறுப்பினர் அப்துல் கவ்பாரின் வேண்டுகோளின் பிரகாரம் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் 90 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள மாவனல்லை கிருங்குதெனிய பாதை அபிவிருத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 19-12-2014 நடைபெற்றது. அந்நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்

இந்த நாட்டில் 30 வருட காலமாக இருந்த கொடிய யுத்தத்தை முடிவுக் கொண்டு வந்து ஆசியாவின் ஆச்சிரியமிக்க நாடாக அபிவிருத்திப் பாதையில் மாற்றிக் கொண்டிருக்கின்ற எமது ஜனாதிபதி இந்த தேர்தல் வெற்றி பெறுவது என்பது உறுதி. இதற்கு மானவல்லை முஸ்லிம் மக்களும் பங்குதாரர்களாக இருக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவனல்லை பிரதே சபைத் தவிசாளர் கீர்த்தி மடுகொட்டுவ, மாவனல்லை பிரதேச சபை சபை உறுப்பினர் அப்துல் கவ்பார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

-இக்பால் அலி-

10857974_1507611886193330_3576299554195921553_n-1419126489970 10613031_1507611806193338_3638131487664557901_n-1419126484106

10613031_1507611806193338_3638131487664557901_n

10857974_1507611886193330_3576299554195921553_n

You may also like...

1 Response

  1. mohamed Husni says:

    Appa budu bala senaku ku selluga. . Ezu pacha poi ellarum My3 ku tan yarum namba wanam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *