மார்க்க சொற்பொழிவின் நடுவில் தோன்றிய அமைச்சர்: மஸ்ஜிதுல் பவ்ஸான் நிர்வாகம் கண்டனம்

மாவனல்லை ஸாஹிராக் கல்லூரி ஆரம்ப பிரிவு கேட்போர் கூடத்தில் ௮ல் ஹூதா நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று காலை விசேட மார்க்க பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்விற்கு பிரபல மார்க்க சொற்பொழிவாளர்களான மௌலவி இஸ்மாயில் ஷியாஜி மற்றும் மௌலவி மொஹமட் நசீம் ‘மரண சிந்தனை’ ௭னும் தலைப்பில் சொற்பொழிவாற்ற பேச்சாளர்களாக ௮ழைக்கப்பட்டிருந்தனர்.

காலை 9.30 மணியளவில் ஆரம்பமான பயான் நிகழ்வில் ஆரம்ப வரவேற்புரை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது மாவனல்லை பிரதேச சபை ௨ப தலைவர் ஜனாப் M.S.M. காமில் அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் அதாவுத செனவிரத்ன அவர்களும் சபைக்கு வருகை தந்தனர்.

நிகழ்வின் இடையில் வயோதிபர்களுக்கு உதவித் தொகையும் அமைச்சர் தலைமையில் வழங்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் ஹோன்தெனிகொட மஸ்ஜிதுல் பவ்ஸான் நிர்வாகம் தமது பலத்த கண்டனத்தை வெளியிட்டனர்.

மார்க்க நிகழ்வின் இடையில் இது போன்ற அரசியல் மயப்படுத்தப்பட் ட நிகழ்வின் மூலம் தமது பள்ளி நிர்வாகத்தின் பெயரை மாசுபடுத்த முனைவது கண்டனத்திற்குரிய விடயமாகும் என எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தனர்.

மேலும் இந்நிகழ்விற்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துக்கொண்டனர்.

இந்த பதிவானது மஸ்ஜிதுல் பவ்ஸான் நிர்வாகத்தின் வேண்டுகோளின் பேரில் பொது மக்களை அறிவறுத்தும் நோக்கோடு வெளியிடப்படுகிறது.

You may also like...

2 Responses

  1. Fowzan says:

    Masjidul fowzan members da relations um wandu erundada kelvi.So plan panni senji ekura pola

  2. NALAVAN says:

    ATHAVUDA SENAWIRATHNA PETRUKODUTHA primary auditorium UNGALUKKU MARKKA VEDAYAM SEYA MUDUMUNDAL AVR VANDA ENNA THAPPU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *