மாவ­னல்­லையில் இஸ்­லா­மிய தீவி­ர­வா­திகள்: ஞான­சார தேரரின் கண்டுபிடிப்பு

நாட்டில் சவூதி வஹா­பிஸம் எனும் தீவி­ர­வா­தத்தைப் பரப்பும் அர­ச­ சார்­பற்ற 15 இஸ்­லா­மிய நிறு­வ­னங்­களின் செயற்­பா­டு­க­ளையும் அர­சாங்கம் ஆராய்ந்து உரிய சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்க வேண்டும் என பொது பல சேனா தெரி­வித்­தது.download-21-620x330
கிரு­லப்­ப­னை­யி­லுள்ள பொது­ பல சேனாவின் மத்­திய நிலை­யத்தில்  நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே பொது பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மேற்­கு­றிப்­பிட்ட வேண்­டு­கோள்­களை விடுத்தார். அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது,
இலங்­கையில் ஐ.எஸ்.தீவி­ர­வா­தி­களின் உரு­வாக்­கத்­தையும் அடிப்­ப­டை­வா­தத்­தையும் இல்­லாமற் செய்ய வேண்­டு­மென்றால் மத்­ர­ஸாக்­களைத் தடை­செய்ய வேண்டும். அத்­தோடு எத்­தனை மத்­ர­ஸாக்கள் நாட்டில் இருக்­கின்­றன? மத்­ர­ஸாக்­களில் என்ன போதிக்­கப்­ப­டு­கின்­றன? அவற்­றுக்கு எங்­கி­ருந்து நிதி­யு­தவி கிடைக்­கி­றது? என்­பது பற்றி அர­சாங்கம் தேடிப்­பார்க்க வேண்டும். அப்­போது மத்­ர­ஸாக்­களின் உண்மைத் தன்மை விளங்­கி­விடும்.
நாங்கள் இவ்­வாறு தெரி­விப்­ப­தற்­காக இலங்­கை­யி­லுள்ள சம்­பி­ர­தாய முஸ்­லிம்கள் கவ­லைப்­ப­டலாம். நாம் சம்­பி­ர­தாய முஸ்­லிம்­களை எதிர்க்­க­வில்லை.  தீவி­ர­வா­தத்­தையே எதிர்க்­கிறோம். இஸ்­லா­மிய தீவி­ர­வா­திகள் காத்­தான்­கு­டியில், அக்­கு­ற­ணையில், மாவ­னல்­லையில் இருப்­ப­தா­கவே தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. ஆனால் இப்­போது இவர்கள் கொலன்­னா­வை­யிலும் தெஹி­வ­ளை­யிலும் இருக்­கி­றார்கள் என்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது.
15 இஸ்­லா­மிய வஹா­பிஸ/ஸலபி நிறு­வ­னங்கள்

இலங்­கையில் 15 அர­ச­ சார்­பற்ற இஸ்­லா­மிய அமைப்­புகள் வஹா­பி­ஸத்தைப் பரப்பி வரு­கின்­றன. இவ் அமைப்­புகள் சமூக சேவை செய்­வ­தா­கவும் வறி­ய­வர்­க­ளுக்கு உதவி செய்­வ­தா­கவும் கூறிக் கொண்டு தீவிரவாதத்தைப் பரப்­பு­கின்­றன.
ஐ.ஐ.ஆர்.ஓ., ஐ.ஆர்.ஓ, அல்­சபாப், முஸ்­லிமாத்,வாமி, முஸ்லிம் எயிட், நிதா பவுண்­டேசன், ஹிரா பவுண்­டேசன், எம்.எப்.சி.டி., செரண்டிப், ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத், அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத், சுன்னத் அன்சார், ஜமா­அத்தே இஸ்­லாமி, சலபி என்­ப­னவே இந்த 15 இஸ்­லா­மிய அமைப்­பு­க­ளாகும்.
சலபி அமைப்பு களு­போ­வில, நீர்­கொ­ழும்பு, அக்­கு­றனை, மாவ­னல்லை ஆகிய பகு­தி­களில் கிளை­களைக் கொண்­டுள்­ளது. இந்த அமைப்பு பல­தார மணம் செய்து அதி­க­மாகப் பிள்­ளை­களைப் பெற்றுக் கொள்ள ஊக்­கு­விக்­கி­றது.
ஹிரா ­ப­வுண்­டேசன் ஏனைய மதத்­தவரை குறிப்­பாக பெளத்­தர்­களை இஸ்­லாத்­துக்கு மதம் மாற்றம் செய்யும் பணியை முன்­னெ­டுக்­கி­றது. இதற்­காக இந்த பவுண்­டேசன் சிங்­கள மொழியில் புத்­த­கங்­களை அச்­சிட்டு வெளி­யிட்டு வரு­கின்­றது. பௌத்­தர்கள் நாம் ஏனைய மதத்­த­வர்­களை மதம் மாற்றிக் கொள்ள முயற்­சிக்­க­வில்லை. புத்­த­கங்கள் அச்­சி­ட­வில்லை.
சிங்­க­ளத்தில் அச்­சி­டப்­பட்­டுள்ள புத்­த­கங்­களில் பெளத்­தத்­தையும் சிலை வணக்­கத்­தையும் பற்றி தவ­றான கருத்­துகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.
இவ்­வா­றான மத­மாற்றம் நடை­பெ­று­வது ஏன்? மத்­ர­ஸாக்­களில் என்ன போதிக்­கப்­ப­டு­கின்­றன என்­பது பற்றி அமைச்­சர்கள் பைசர் முஸ்­தபா, ஹக்கீம், ரிசாத், அமீர் அலி என்போர் எமக்குத் தெளி­வு­ப­டுத்த வேண்டும். இது தொடர்­பாக அவர்­க­ளுடன் பகி­ரங்க விவா­தத்­துக்கும் நாம் தயா­ராக இருக்­கிறோம்.
அன்று மஹிந்த அரசு எம்மை பைத்­தி­ய­கா­ரர்கள் என்­றது. எமக்கு நோர்­வே­யி­லி­ருந்து பணம் கிடைக்­கி­றது என்­றது. பெரும்­பான்மைக் கட்­சிகள் இரண்டும் பெரும்­பான்மை சிங்­க­ள­வ­ரது பிரச்­சி­னைகள் தொடர்பில் அக்­கறை கொள்­ளாது சிறு­பான்­மை­யி­னரின் நலன்­களைப் பேணு­வ­திலே அக்­க­றை­யாக இருக்­கி­றது. இரு­கட்­சி­களும் சிறு­பான்­மை­யினர் ஆத­ரவு இல்­லாமல் தேர்­தலில் வெற்­றி­பெற முடி­யாது என்று நினைக்­கின்­றன. சிங்­க­ள­வர்­களின் முனங்­கல்­க­ளுக்கும் செவி­சா­யுங்கள் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைக் கேட்டுக் கொள்கிறேன்.

You may also like...

1 Response

  1. Kaleel says:

    Sinhala tila book hala wali etadinga

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *