மாவனல்லைச் சம்பவம் குறித்த உண்மையை வெளிப்படுத்துங்கள்! முஸ்லிம் கவுன்ஸில் வேண்டுகோள்

இனவாத சூழ்நிலையில் நடைபெற்றுள்ள மாவனல்லைக் கடை எரிப்புச் சம்பவம் தொடர்பிலான உண்மையை மிக விரைவில் கண்டுபிடிக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொள்வதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன் எமது மாவனல்லை நியூஸ் இடம் தெரிவித்தார்.

மாவனல்லைக் கடை எரிப்புச் சம்பவம் குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த சில தினங்களாக நாஷகார செயல்கள் நடைபெறப்போவதாக பரப்பப்படுகின்ற வதந்திகளுக்கு மத்தியில் மாவனல்லையில் நேற்று இரவு கடை எரிப்புச் சம்பவம் நடைபெற்றுள்ளமை முஸ்லிம்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பிலான உண்மையை விரைவில் வெளிக்கொண்டுவருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நாம் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

1136083062176843322mcsl3

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *