மாவனல்லைத் தீயணைப்புப் பிரிவு செயற்படாமையே, அதிக நஷ்டத்துக்கு காரணம்!

மாவனல்லையிலுள்ள தீயணைப்புப் படையினர் செயற்பட்டிருந்தால், எனது கடையின் தீயை அரைவாசிக்காவது கட்டுப்படுத்தியிருக்கலாம் என மாவல்லையில் நேற்று காலை எரிக்கப்பட்ட வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் முஹம்மது மஹ்ரூப் எமது மாவனல்லை நியூஸ் இற்கு தெரிவித்தார்.

எமது ஊடகவியலாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்றபோதே அவர்களிடம் கடை உரிமையாளர் தனது கவலையைத் தெரிவித்தார்.

எனக்கு நேற்று அதிகாலை 3.00 மணியளவில் தொலைபேசியின் மூலம் ஒருவர் தொடர்புகொண்டு எனது கடையிலிருந்து புகையொன்று வெளியாவதாக குறிப்பிட்டார். எனது வீடு சுமார் 05 கிலோ மீற்றர் தூரத்திலேயே உள்ளது. அவ்விடத்துக்கு 10 நிமிடத்துக்குள் வந்து சேர்ந்தேன்.

உடனே, மாவனல்லை தீயணைப்புப் பிரிவுக்கு தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து தெரிவித்தேன். அப்போது அங்குள்ள எந்தவொரு தீயணைப்பு இயந்திரமும் செயற்படுவதில்லையென பதிலளித்தனர். பின்னர் கண்டியிலிருந்தே தீயணைப்புப் படை வந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன்போது கடையிலிருந்த அனைத்து சாமான்களும் எரிந்து முடிந்து விட்டன.

கடையில் மின்சார ஒழுக்கு ஏற்பட்டதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லையென முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்தன. இந்த தீச் சம்பவத்தினால் சுமார் 1 கோடி ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என நம்புவதாகவும் கடை உரிமையாளர் மேலும் குறிப்பிட்டார்.

983675_10201350570119746_8205889362395810655_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *