மாவனல்லையில் இலவச ஒரு நாள் ஊடக செயலமர்வு

மாவனல்லை JM MEDIA ஊடக நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் இலவச ஒரு நாள் ஊடகச் செயலமர்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (03.01.2016) மாவனல்லை முபாரிஸ் மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை இடம்பெறும்.

இந்த இலவசக் கருத்தரங்கு தேசிய புகழ் பெற்ற அறிவிப்பாளர், அதிபர் ARM ஜிப்ரி மற்றும் இன்னும் பல ஊடகவியளாலர்களைக் கொண்டு நடாத்தப்படவுள்ளது.

தமிழ் பேசும் ஊடகர்கள், மாணவர்கள், ஊடக அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புகின்றவர்கள், ஊடக ஆர்வலர்கள்,சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி இணையங்களை செயற்படுத்துகின்றவர்கள் அனைவரும் இச்செயலமர்வில் பங்குபற்றி பயன்பெறலாம்.

10391712_546290155535644_6171703664861922936_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *