மாவனல்லையில் காலாவதியான பெருந் தொகை ஜெலி பக்கெட்டுக்கள் மீட்பு

காலாவதி திகதி மாற்றியமைக்கப்பட்ட நிலையில் சிறுவர்களின் உணவுக்காக பயன்படும், பாவனைக்கு உதவாத ஒரு தொகை ஜெலி பக்கெட்டுக்கள் மாவனல்லை பட்டவல தொழிற்சாலை யொன்றிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று (06) காலை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இவை மீட்கப்பட்டுள்ளன. சுமார் ஒரு லட்சத்து 50,000 ஜெலி பக்கெட்டுக்கள் இவ்வாறு மீட்கப்பட்டதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த ஜெலி பக்கெட்டுக்களில் காலாவதி திகதி இரண்டு அச்சிடப்பட்டிருந்தன.

குறித்த தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை மாவனெல்ல பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்பட்ட காலாவதியான 60,000 ஜெலி பைக்கற்றுக்கள் நுகர்வோர் அதிகார சபையினரால் காலி ஹபராதுவ பிரதேசத்தில் கடந்த 3ம் திகதி கைப்பற்றப்பட்டமை குறுப்பிடத்தக்கது.

consumer-affairs-authority_0_0

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares