மாவனல்லையில் சில இடங்களில் சர்வதேச பிறை அடிப்படையில் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது

உலக முஸ்லிம்களின் இரண்டு பெருநாள் தினங்களில் தியாகத்தை வலியுறுத்தும் பெருநாளான புனித ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாளை இன்று உலக முஸ்லிம்கள் கொண்டாடிவருகின்றனர்.

மவனல்லையிலும் சர்வதேச பிறை அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை மற்றும் குத்பாப் பிரசங்கம் என்பன 04-10-2014 இன்று சனிக்கிழமை தெல்கஹகொட மற்றும் ஹோன்ந்தனிகோடா ஆகிய பிரதேசங்களில் வாழும் சில சகோதரர்கள் இன்று ஹஜ்ஜுப்பெருநாளை கொண்டாடுகின்றனர்.

இதில் ஆண் பெண் அடங்கலாக சுமார் பலர் கலந்து கொண்டனர்

சர்வதேசப் பிறை அடிப்படையில் தியாகத் திருநாள் ஈதுல் அழ்ஹா புனித ஹஜ்ஜுப் பெருநாளை இலங்கை நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம்கள் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1962780_300106503527616_3660365690198243202_n

10625061_10152270014201105_4799038461846627007_n

You may also like...

2 Responses

 1. Ifaz says:

  மாற்றுக் கருத்துக்களை அங்கீகரிப்போம். அவர்களும் இஸ்லாத்தை வைத்துத் தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள். நாமும் இஸ்லாத்தை வைத்துத்தான் திங்கட் கிழமை கொண்டாடுகிறோம். சுன்னாவை அனுகும் முறையிலுள்ள வித்தியாசம்.

  • Ansar says:

   நாங்கள் இஸ்லாத்தை வைத்து புதன்கிழமை பெருநாள் கொண்டாட முடிவு செய்திருக்கின்றோம். இது நாங்கள் சுன்னாவை அணுகும் முறையிலுள்ள வித்தியாசம் ஆகும்.

   ஜமாத்தே போராமி, மாவனல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *