மாவனல்லையில் நடைபெறவுள்ள மாபெரும் இரத்ததான முகாம்

மாவனல்லை இலங்கை ஜமாஅதே இஸ்லாமி கிளையியும் மாவனல்லை சுகாதார வைத்திய அலுவலகமும் இணைந்து வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் இரத்ததான நிகழ்ச்சி, இவ்வருடமும் ஒன்பதாவது முறையாக நடத்த ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

இந்த இரத்ததான நிகழ்ச்சி இமாதம் 7ம் திகதி (07/12/2014) அதாவது ஞாற்றுக்கிழமை றாழியா வரவேற்பு மண்டபத்தில் காலை 8.00 மணிமுதல் பி.ப. 4.00 மணிவரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இந்நிகழ்வுவில் பெண்களுக்கு விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பதில் சுகாதார அமைச்சர் திரு. லலித் திசாநாயக்க அவர்கள் வருகை தரவுள்ளார். சென்ற வருடம் நடைபெற்ற இரத்ததான முகாமில் 484 பயின்ட் இரத்தம் வழங்கப்பட்டது குருப்பிடத்தக்க ஒரு விடயம். இந்நிகழ்வில் அனைவரும் பங்குகொண்டு ஒத்துழைப்பு நல்குமாறு அனைவரையும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லை கிளை அன்புடன் அழைக்கிறது.

10620142_889725501047440_3599489051372954713_o-1417758386355 10838108_892342964119027_1058068610356520093_o-1417759666143 10805767_889724587714198_3031013546811927861_n-1417757946941

10620142_889725501047440_3599489051372954713_o

10644652_889724587714198_3031013546811927861_o

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *