மாவனல்லை – ரம்புக்கனை வீதியை புணரமைத்து தருமாறு மக்கள் ஆர்ப்பாட்டம்

மாவனல்லை – ரம்புக்கனை பிரதான வீதியை புணரமைத்துத் தருமாறு கோரி மூவீன மக்களும் இணைந்து பாரிய எதிர்ப்பார்பாட்டம்;; ஒன்றை அண்மையில் முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபீர் ஹாஷீம் , முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் அதாவுத செணவிரட்ன மற்றும் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் ஆகியோருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

19 கிலோ மீற்றர்களைக் கொண்ட இவ்வீதி கடந்த ஆட்சியின் போது, அபிவிருத்தி செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்ந்திருந்த போதிலும் இறுதியில் அவை கைவிடப்பட்ருந்தன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இப்பிரதேசத்தில் வாழ் மூவின மக்களும் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து வெற்றியின் பங்குதாரர்களாக விளங்கினர். தேர்தலின் போது இம்மக்களின் ஆதரவை பெறுவதற்காக மாவனல்லை ஐக்கிய தேசிய கட்சி பிரதான ஏற்பாட்டாளர் கபீர் ஹாஷீம் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். இதில் 100 நாட்களுக்குள் மாவனல்லை – ரம்புக்கனை வீதி புணரமைக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
பின்னர், நெடுஞ்சாலைகள மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவியேற்ற அவர் தன்னால் வழங்கப்பட்ட வாக்குறதிகளை அதிகாரம் கையிலிருந்தும் நிறைவேற்றத் தவரியிருந்தார். இதனால் இப்பிரதேச மக்கள் பெறும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதற்கு எதிர்புத் தெரிவித்து கடந்த ஞாயிற்றுக் கிழமை மாவனல்லை ரந்திவலை சந்தியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது பெறும் திரலான மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன், பாதை மறியளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்ருந்தனர்.

இதனால் இவ்வீதியில் வாகனபோக்குவரத்து தடைப்பட்டதுடன் பொலிஸார் இவ்விடயத்தில் தலையிட்டு ஆர்ப்பாட்டத்தை கலைக்க முட்பட்டனர். எனினும், இவ்விடயத்துக்கு தீர்வு கிடைக்கும் வரை இப்போராட்டம் தொடரும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உருதியாக தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து அவ்விடம் வந்த மாவனல்லை பிரதேச சபைத் தலைவர் கீர்த்தி பண்டார மடுகொடுவ இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவருவதாகவும், உடனடி தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறதி வழங்கியிருந்தார். இதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

இதனை அடுத்து இவ்வீதியில் காணப்படும் குழிகள் அடைக்கப்பட்டுள்ளன. எனினும், “இதுவல்ல தீர்வு. வீதி உடனடியாக செப்பனிடப்பட வேண்டும் இல்லை எனில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மாவனல்லை நகரில் முன்னெடுக்கவுள்ளோம்”- என சம்மந்தப்பட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

(ராயிஸ் ஹஸன்)

unnamed-1-1430300941643

unnamed-2-1430300944708

unnamed-6-1430300945673

unnamed+(1)

unnamed

unnamed+(2)

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *