மாவனல்லையும் பிரதேசவாதமும்

அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரங்களுக்கிடையில் அன்று மதீனாவில் கோத்திர வெறி, இன்று ஒரு சில மாவனல்லை பிரதேச மக்கள் மத்தியில் பிரதேச வெறி

ஜாஹிலிய்யாக் கால மதீனா சமூகமான அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திர முரண்பாடு போல் ஒரு சில மாவனல்லை பிரதேச மக்களின் செயற்பாடுகளுள்ளன.

அன்று அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திர தலைவர்களும், கவிஞர்களும், பேச்சாளர்களும் தமது கோத்திரத்தை புகழ்ந்தும் மற்றைய கோத்திரத்தை இகழ்ந்தும் கோத்திர வெறியை மக்கள் மத்தியில் ஊட்டினர்.

இந்த கோத்திர வெறியால் பல உயிர்களை காவு கொண்டதுடன் பல தலைமுறையினருக்கும் கடத்தப்பட்டது.

அதே போல் இன்று மாவானலையில் தம்மை கற்றறிந்த மேதைகளாக அலங்கரித்துக் கொள்ளும் சில மேதவிகளும்,  சிவில் தலைமைகளும் பிரதேசவாத மதுவை சகோதரர்களாக வாழும் மக்கள் மீது திணிக்கின்றனர்.

இதன் தாக்கம் எத்தனை தலைமுறையினருக்கு கடத்தப்படப் போகின்றதோ அல்லாஹ் தான் அறிவான்!

அன்று மதீனா சாசனத்தினுடாக பரம எதிரிகளாகிய அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரங்களை ஒருமைப்படுத்தியது. அவர்களின் வாழ்வு, இருப்பு உரிமைகளை உறுதிப்படுத்தியது. உலகின் முன்மாதிரிகளாகவும் மாற்றியது.

தம்மை சமாதான தூதுவர்களாக பிரகடனப்படுத்திக் கொண்டு பிரிவினை வாதத்திற்கு அன்று விறகு போட்ட அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் போன்ற யூதர்களின் சூழ்ச்சி நபி(ஸல்) அவர்களால் முறியடிக்கப்பட்டது போல் இன்று எம்மத்தியில் தமது அரசியல் இலாபத்திற்காக சமாதான தூதுவர்களாக வருகின்ற யூதர்களின் சதியும் முறியடிக்கப்பட வேண்டும்.

பிரதேசவாதம், பிராந்தியவாதம், பிரிவினைவாதம் என்பன மதுவூட்டப்பட்ட ஒரு கொடிய விலங்கு. மது ஊட்டப்பட்ட விலங்கு தெளிவு நிலைக்கு வரும்வரை எதை சொன்னாலும் செவிடன் காதில் சங்கு ஊதுவதாகத்தான் இருக்கும்.

சில வேலையில் அதற்கு பிடித்துள்ள வெறி மேலும் பன்மடங்கு அதிகரிக்கும். ஏன் எனில் அது தன்னிலையிலில்லை. Abnormal Stage இல் தான் இருக்கும். அதன் புத்தி பேதளிக்கப்பட்டிருக்கும். அதற்கு என்ன அறிவுரை கூறியும் விளங்காது. அது வெறி பிடித்த நிலையில் இங்கும், அங்குமாக அழைந்து திரியும். அது தெளிந்து தனது சுய நிலையை அடைவதற்கு சற்று காலம் எடுக்கும். அதற்கு பின்னர் தான் தன்னுடைய மடமையை உணர்ந்து வருந்தும். காலம் தள்ளி ஞானம் அதற்கு பிடிக்கும்.

இஸ்லாம் முஸ்லிம்களை “உம்மத்” என்ற பரந்த கருத்தியலினூடாக ஒன்றிணைக்கின்றது. உம்மத் என்ற விரிந்த கண்ணோட்டத்தை தகர்ப்பதற்காக ஷைத்தானியத்தும் தாஹுதியத்தும் போட்டிபோட்டுக் கொண்டு தினமும் முயற்சிக்கும். இதனால் தான் ஒரு உம்மாவாக இருந்த நாம் இன்று பிரித்தாளும் சக்திகளின் சதியால் பல நாடுகளாக, பல பிராந்தியங்களாக துண்டாடப்பட்டுள்ளோம்.

பிரிவினைவாதம், பிரதேசவாதம், பிராந்தியவாதம், கோத்திரவாதம், மொழிவாதம், இனவாதம், நிறவாதம் என்பவற்றை ரஸுல்லாஹ் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் வதாவில் தகர்த்தெறிந்தார்கள்.

நாங்கள் ஒரு ஊரக பிரித்து பார்க்காமல் அனைத்தையும் மாவனல்லை சமூகமாக நோக்குவேமே ஆனால் எம்மை யாராலும் அசைக்கமுடியாது….

-ஸஜாத் முஹம்மத்-

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *