மாவனல்லை இன்ஷிராஹ் இக்பாலின் ”நிழலைத் தேடி” நாவல் வெளியீடு

தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவி மாவனல்லை இன்ஷிராஹ் இக்பாலின் “நிழலைத் தேடி” சமூக நாவல் நூல் வெளியீட்டு விழா கடந்த வியாழக்கிழமை(27) பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் தென் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில், எழுத்தாளர்களான உமா வரதராஜன், கவிஞர் அன்புடீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நூலின் முதற் பிரதியை எம்.எஸ்.எம்.அஸாறுதீன் பெற்றுக்கொண்டார். நூலாய்வுரையை தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லா நிகழ்த்தினார். இதன்போது நூலாசிரியை இன்ஷிராஹ் இக்பாலுக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் சபீனா எம்.ஜி.ஹஸன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

இந்த நூல் உயர் கல்வி அமைச்சினால் பல்கலைக்கழக மற்றும் உயர் கல்வி நிறுவன மாணவர்களுக்கிடையே தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட இளம் சாதனையாளர்களுக்கான போட்டியின் நாவல் பிரிவில் முதலிடம் பெற்றது.

மாவனெல்லை பதுரியா மத்திய கல்லூரியின் பழைய மாணவியான நூலாசிரியை இன்ஷிராஹ் மௌலவி ஏ.சீ.எம்.இக்பால் எழுத்தாளர் சுலைமா சமி இக்பால் தம்பதியின் சிரேஸ்ட புதல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.

-பி.எம்.எம்.ஏ.காதர்-

download (9)

download (10)

images (7)

07462b44c58a4a85c2fa0ea624f3b558f87186fdd4fd6dcf6290b81aa29ac7484ad0ff6a39d1e2b44a61c0515c201969f0c7eb267069bbfb6706ebcef98cf58f5ed06b0cca23437aea71709cd1ebc8ebd4f64a16210c681d67919d4cdfdfa015182

07462b44c58a5f84cef014ee39f7f055a16d9cbe98a874cf6599ba13adddc1491091f26e7ed6e6b35638df501f735d30b19bb5396632bbe5661ee7d1f9839d885dde6b64ce25497eeb707d99dce2a6e8d1fc4a7f25046d1d6ff6c254879e9842acd159f815182

07462b44c58a4a85c2fa0ea624f3b55bf87186fdd4fd6dcf6290b81aa29ac7484ad0ff6a39d1e2b44a61d1505a211969f0c7eb267069bbfb6704edcbfd8ef58f5ed06b0cca27467aea71709bdbe6c8e2defb46112c0e6c1f01a0dd08c5c815182

07462b44c58a5f84cef014ee39f7f055a16d9cbe98a874cf6599ba13adddc1491091f26e7ed6e6b35638df501f735d30a79bb8386632bbe5661ee7d1f98a9b885fdf6a0fa3254372e8717f9fd8e2a1eddffa46114b0c6f116df9c75b869cf073ec9543ef5515182

07462b44c58a5f84cef014ee39f7f055a16d9cbe9ca874cf6599ba13adddc1491091f26e7ed6e6b35638df501f735d30b19bb5396632bbe5661ee7d1f98a9b8a5dda6a08a3254372e8717c97dee2a1eddffa47154b0c6e1f6bf8c6578698fe73ec9543ef5515182

07462b44c58a5f84cef014ee39f7f055a16d9cbe92a874cf6599ba13adddc1491091f26e7ed6e6b35638df501f735d30b19bb53a6632bbe5661ee7d1f9839c8b5bdd6864ce25497eeb70799cdfe1a3ecd7fe467f250d6e1169fbc055819c9842acd159f815182

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *