மாவனல்லை இன்ஷிராஹ் இக்பால் எழுதிய ‘நிழலைத் தேடி’ நூல் அறிமுக விழா

மாவனல்லை இன்ஷிராஹ் இக்பால் எழுதிய, உயர் கல்வி அமைச்சின் Talent போட்டியில் தேசிய ரீதியில் முதற் பரிசு பெற்ற ‘நிழலைத் தேடி’ எனும் சமூக நாவல் நூல் அறிமுக விழா நேற்று (26) மாலை கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெற்றது.

காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்களின் தலைமையில் இடம்பெறற இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக பொதுச் சேவை அணைக்குழு உறுப்பினரும் முன்னாள் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளருமான திரு. உடுவை எஸ். தில்லை நடராசா கலந்து கொண்டார்.

முன்னிலையும் முதற் பிரதியையும் தேசமான்ய தேசபந்து புரவலர் டாக்டர். ஏ.பீ. அப்துல் கையூம் (ஜே.பீ) அவர்களும் சிறப்புப் பிரதியை திறனாய்வாளர் திரு. கே.எஸ். சிவகுமாரன் அவர்களும் பெற்று இவ்விழாவை சிறப்பித்தனர்.

இவ்விழாவில் மூத்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
-ஷபீக் ஹுஸைன்-

download (9) download (10) images (7)

IMG_7819

IMG_7832

IMG_7859

IMG_7864

IMG_7915

IMG_7952

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *