மாவனல்லை எம்.எம். மன்சூர் மொழிபெயர்த்த ‘பட்டி’ நூல் வெளியீட்டு விழா

சிங்கள தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கொடகே வெளியீடான மாவனல்லை எம்.எம். மன்சூர் தமிழில் மொழிபெயர்த்த சிங்கள எழுத்தாளர் கே. ஜயதிலகவின் சிறுகதைகள் அடங்கிய ‘பட்டி’ நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 10.01.2016 அன்று காலை 10 மணிக்கு மேமன்கவி தலைமையில் கொழும்புத் தமிழ் சங்க விநோதன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த விழாவில் நூலின் முதற் பிரதியினை புரவலர் ஹாசிம் உமர் அவர்கள் பெற்றுக் கொள்வதுடன், நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கொடகே புத்தக நிறுவனத்தின் நிறுவனர் திரு. சிரிசுமன கொடகே அவர்களும், கே.ஜயதிலக அவர்களின் பாரியார் திருமதி கே.ஜயதிலக அவர்களும் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

வரவேற்புரையை மூத்த ஊடகவியலாளர் கே.பொன்னுத்துரை நிகழ்த்தவுள்ளதுடன் நூலாசிரியர் அறிமுக உரையை திக்குவல்லை கமால் நிகழ்த்தவுள்ளனர். கருத்துரைகளை சிங்கள மொழியில் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான ஹேசந்திர பதிரண அவர்களும், தமிழில் திருமதி வசந்தி தயாபரன் அவர்களும் நிகழ்த்தவுள்ளனர்.

ஏற்புரை மற்றும் நன்றியுரையை நூலாசிரியர் கலாபூசணம் மாவனல்லை மன்சூர் நிகழ்த்துவார்.

920624_1184752294872754_5967844570528075737_o-500x353

மொழிபெயர்ப்பாளர் மாவனல்லை எம்.எம்.மன்சூர்


 • 1970கள் தொடக்கம் ஈழத்து கலை இலக்கியத்துறையில் எழுத்து பணியாற்றி வரும் மாவனல்லை எம்.எம்.மன்சூர், இலங்கை மாவனல்லை மண்ணிலிருந்து ஆர்ப்பாட்டமின்றி எழுத்துப் பணியாற்றி வருபவர்.
 • செய்தித்துறையுடன் தன் எழுத்துப் பணியை ஆரம்பித்த எம்.எம்.மன்சூர், சிறுவர் இலக்கியம், சிறுகதை, இலக்கியக் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என பல்வேறு வடிவங்களின் வழியாக தனது ஆளுமையை வெளிப்படுத்தி வருகிறார்.
 • குறிப்பாக சிங்களத்திலிருந்து தமிழில் படைப்புக்களை மொழிபெயர்க்கும் பணியில் இன்று கவனிக்கதக்கவராக திகழ்கிறார்.
 • 1950ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் திகதி மாவனல்லையில் பிறந்து தனது ஆரம்பக்கல்வியை மாவனல்லை ஸஹிரா கல்லூரியில் (தற்போது தேசிய பாடசாலை) கற்றார்.உயர்தரம் வரை கற்றதோடு மாவனல்லை மயுரபாத மகா வித்தியாலயத்தில் சிங்களத்தையும் கற்றுக் கொண்டார்.
 • கல்லூரியில் கல்வி கற்கும் காலத்திலேயே இலக்கியத்தில் அதிக ஈடுபாடுகாட்டி வந்ததால் கல்லூரி அதிபர் காலஞ்சென்ற பிரபல எழுத்தாளார் ஏ.பி.வி.கோமஸ் அவர்களின் வழி காட்டுதலின் பேரில் இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தார்.
 • அதன் பயனாக கல்லூரியில் ‘செங்கரும்பு” என்ற பெயரில் ஒரு கையெழுத்துப் பத்திரிகையை அந்நாட்களில் நடத்தி வந்திருக்கிறார்;.
 • 1970 ம் ஆண்டு தவச நிறுவனத்தின் தினபதி – சிந்தாமணி பத்திரிகைகளின் செய்தியாளராக எழுத்துலகில் நுழைந்து மேற்படி பத்திரிகைகள் உட்பட தினகரன் – வீரகேசரி பத்திரிகைகளிலும் பல தேசிய பத்திரிகைகளிலும், அப்போதைய பல சஞ்சிகைகளிலும் பல்வேறு வகையான இலக்கியக் கட்டுரைகளையும், சிறுகதை, கவிதைகளையும், அநேக மொழிபெயர்ப்புக் கதைகளையும் எழுதி இலக்கியப் பங்களிப்புச் செய்துள்ளார்.
 • தற்போது தினக்குரல், விடிவெள்ளி நவமணி, தினகரன், வீரகேசரி பத்திரிகைகளிலும், ஞானம், படிகள், ஜீவநதி போன்ற சஞ்சிகை களிலும் தனது பங்களிப்பைச் செய்து வருகிறார்.
 • இவர் மல்லிகையின் நீண்ட நாள் எழுத்தாளர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
 • 1970ம் ஆண்டு உள்ளுராட்சி மன்றங்களுக்கு இடையில் ஆணையாளர் மூலமாக நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற இவரது கவிதைக்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது என்பது மாத்திரமின்றி பிரதேச, மாவட்ட, மாகாண, அகில இலங்கை ரீதியில் நடத்தப்படுகின்ற அரச சாகித்திய விழாக்களில் தொடார்ந்து வருடாந்தம் பங்குபற்றி பரிசில்கள், பாராட்டுக்கள், சான்றிதழ்கள் பெற்று வருகிறார்.
 • 2013ம் ஆண்டு குளியாப்பிட்டியில் நடைபெற்ற அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற அரச சாகித்திய விழாவின் போது இவர் எழுதிய இலக்கிய விமர்சனம் முதலாம் இடத்தைப் பெற்றமைக்காக பணப்பரிசிலும், சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
 • இவர் எம்.எம்.மன்ஸூர்;, மாவனல்லை எம்.எம்.மன்ஸூர்;, ‘தமிழ்வண்ணன்” என்ற புனைப்பெயர்களிலும் எழுதி வந்திருக்கிறார்..
 • அக்காலத்து இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் பலவற்றுக்கு பிரதி மூலம் தனது பங்களிப்பைச் செலுத்தி வந்திருக்கிறார். கவிதை நாடகம் என்பவற்றோடு அப்போதைய முஸ்லிம் நிகழ்ச்சி இவரது அநேக கவிதைகளை ஒலிபரப்புச் செய்திருக்கிறது. அந்நிகழ்ச்சி யின் தலைப்புக் கவிதை இவருடையதாகத்தான் இருக்கும். ‘வரலாற்றில் ஓர் ஏடு” நிகழ்ச்சிக்கும் பெரும் பங்களிப்புச் செய்திருக்கிறார்;.
 • 2010ம் ஆண்டு கலாபூஷணம் அரச விருது, 2011ம் ஆண்டு இனங்களுக்கு இடையிலான நல்லிணக்க ஒன்றியம் மூலமாக சாமஸ்ரீ தேசகீர்;த்தி, 2013ம் ஆண்டு சமாதான நீதிவான் ஆகிய பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டா்.
 • 2011ம் ஆண்டு ‘குள்ளன்” என்ற இவரது சிறுவர்; இலக்கிய நூல் கல்வி அமைச்சின் நூலகப் புத்தகமாக வெளிவந்திருக்கிறது.
 • இந்த நூலின் மூலம் சமூகத்தில் கவனிக்கப்படாத உருவத்தில் குள்ளர்களான ஒரு பிரிவினரைப் பற்றிய ஒரு கவன ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்;.
 • பல புத்தக வெளியீடு செய்யும் அளவுக்கு சிறுகதைகள், மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் உட்பட ஏனைய கதைகளும், கட்டுரைகளும் இலக்கியக் கட்டுரைகளும் இவர் கைவசம் உள்ளன.
 • இவை யாவும் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளிவந்தவை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது
  இத்தொகுதி மூலம் சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்து தந்திருக்கும் கே.ஜயதிலக அவர்களின் சிறுகதைகளை தமிழுக்கு கொண்டு வருவதில் மன்சூர் முன்னணியில் நிற்கிறார். (thinasari)

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *