காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தைகயை கொலை செய்த மகன் , மாவனல்லையில் சம்பவம்

தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தைக்கு இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் ஒன்று நேற்று மாவனல்லையில் இடம் பெற்றது. இவ்வாறு உயிரிலந்தவர் மாவனல்லை ஹிங்குல பகுதியில் வசிக்கும் காமினி ஆனந்த எனும் இரண்டு பிள்ளையின் தந்தையாவார்.

19 வயதுடைய சந்தேக நபர் திருமணம் முடிந்த பெண் ஒருவரையே காதலித்துள்ளார்.

நேற்று தனது காதலியை வடவலையில் வைத்து சந்தித்த போது தனது தந்தை கண்டதையடுத்தே இக்கொலை இடம் பெற்றுள்ளது.

இங்கு தாக்குதலுக்கு பயன்படுத்திய கம்பு இரண்டாக உடைந்ததன் காரணமாக சந்தேக நபர் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஒன்றில் இருந்த இரும்பு கம்பியை கொண்டுவந்து தனது தந்தையை தாக்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்தார்.

இரும்பு கம்பியல் அடித்த பின் கீழே விழுந்த தந்தையின் தலைக்கு கல்லினால் அடித்து ஆட்டோவை தனது தந்தையின் மேல் ஏற்றிவிட்டு சந்தேக நபர் தப்பி சென்றுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தார்.

IMG-20150406-WA0010-1428323612714

IMG-20150406-WA0010

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *